3வது அலை குறித்து குட்நியூஸ்.. 2வது அலை போல் இருக்க வாய்ப்பே இல்லை.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா 3வது அலை குறித்து பெரியஅளவில் அச்சம் வேண்டாம் மக்களே.. ஏனெனில் கொரோவின் புதிய பிறழ்வுகள் எதுவும் உருவாகவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். புதிய விகாரி என்று சொல்லப்படும் கொரோனா வைரஸின் புதிய மரபணு மாறிய வரிசைகள் உருவானால் தான் பாதிப்புகள் மோசமாக இருக்கும்.

ஆனால் அப்படியான நிலை இப்போது வரை இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை எனவே மூன்றாவது அலை என்பது 2வதுஅலை போல் பயங்கரமாக இருக்காது. 2 வதுஅலையின் உச்சத்தின் போது 4லட்சம் கேஸ்கள் இருந்தது. ஆனால் 3வது அலையின் உச்சத்தின் போது அதிகபட்சம் ஒரு லட்சம் கேஸ்கள் வரும் . அது அக்டோபரில் வர வாய்ப்பு உள்ளது. எனவே மூன்றாவது அலை சிறிய அலையாகவே இருக்கும் என்று கான்பூர் ஐஐடியின் பேராசிரியர் மணீந்திரா அகர்வால் கூறினார்.

SUTRA எனப்படும் தேசிய 'சூப்பர் மாடல்' முயற்சியில் ஈடுபட்டுள்ள கான்பூர் ஐஐடியின் பேராசிரியர் அகர்வால் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் "மூன்றாவது அலை நிச்சயமாக இரண்டாவது அலை போல் குறிப்பிடத்தக்கதாக இருக்காது. எதிர்காலத்தில் எந்த பயங்கரமான சூழ்நிலையையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

மரபணு மாற்றிய வைரஸ்கள்

மரபணு மாற்றிய வைரஸ்கள்

ஆகஸ்ட் இறுதியில் மற்றும் செப்டம்பர் வரை சிறிது அதிகரிப்பு இருக்கும். இது முக்கியமாக ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டதால் உருவானது. இது புதிய மாறுபாடு (வைரசின்அடுத்த வெர்சன்) காரணமாக இல்லை. எங்கும் புதிய மரபணு மாற்றிய வைரஸ்கள் இருப்பதற்கான அறிகுறி இல்லை. எனவே, ஒரு புதிய மாறுபாடு இல்லாமல், மூன்றாவது அலை ஒரு சிற்றலையாகவே இருக்கும்.

2வது அலை மாதிரி

2வது அலை மாதிரி

SUTRA எனப்படும் தேசிய 'சூப்பர் மாடல்' முயற்சியில் ஈடுபட்டுள்ள அகர்வால் திங்களன்று, "மூன்றாவது அலை நிச்சயமாக இரண்டாவது அலை போல் குறிப்பிடத்தக்கதாக இருக்காது. எதிர்காலத்தில் எந்த பயங்கரமான சூழ்நிலையையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. "

முதல் அலை போல் இருக்காது

முதல் அலை போல் இருக்காது


கோவிட் -19 இன் புதிய மாறுபாடு (மரபணு மாற்றம்) இல்லாமல் தினசரி கேஸ்களின் உச்சம் மிகக் குறைவாக இருக்கலாம் (சுமார் 50,000 வழக்குகள் மட்டுமே) அடிக்கோடிட்டுக் காட்டி, அவர் கூறினார், "மூன்றாவது அலை வந்தால், மருத்துவமனைகளின் சுமை முதல் அலை சூழ்நிலையை விடக் குறைவாக இருக்கும்.

டிசம்பரில் குறையும்

டிசம்பரில் குறையும்


ஜூலை தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு மற்றும் வரைபடம், அக்டோபரில் உச்சத்திற்குப் பிறகு ஒட்டுமொத்த எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்பதைக் காட்டுகிறது மற்றும் டிசம்பரில் மிகக் குறைந்த எண்ணிக்கையை எட்டும். எவ்வாறாயினும், அனைத்து வகையான நோய் எதிர்ப்பு சக்தியையும் கடந்து செல்லக்கூடிய ஒரு புதிய மாறுபாடு வந்தால் மட்டுமே குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும் என்று அகர்வால் கூறினார்.

SUTRA

SUTRA

SUTRA என்பது பல சூழ்நிலைகளில் - நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு, டெல்டா மாறுபாடு, தடுப்பூசி விகிதம் போன்றவை கொரோனா எப்போது - முடிவுக்கு வரும் என்பதை விவரிக்கும் ஆராய்ச்சி ஆகும். சமீபத்திய தரவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அகர்வால் மற்றும் எம் வித்யாசாகர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த வாரம் ஒரு விரிவான கணிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது.

என்ன சொல்கிறார்கள்

என்ன சொல்கிறார்கள்

இதுபற்றி அகர்வால் கூறும் போது, "எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பது குறித்து நாங்கள் ஒரு விரிவான பகுப்பாய்வு செய்கிறோம். ஜூலை மாதத்தின் அனைத்து தரவுகளையும் நாங்கள் காரணியாக்கி அதன் முடிவுகளைப் பகிர்ந்து கொள்வோம்" என்று கூறினார். அறிஞர்களின் கூற்றுப்படி 3வது அலையின் உச்சம் அக்டோபரில் இருக்கும். அதிகபட்சம் ஒரு லட்சம் கேஸ்கள் வரை வரலாம். முதல் அலையைப் போல் கூட இருக்காது என்கிறார்கள். மேலும் 2வது அலையைப்போல் இருக்க வாய்ப்பே இல்லை என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+