புகழ்ந்து பேசினால் விருது கொடுப்பாங்களா?.. இளையராஜா சொன்னது அவர் கருத்து - சீமான் நச் பதில்
மோடியைப் பற்றி இளையராஜா சொன்னது அவரது சொந்த கருத்து என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை: இளையராஜா சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து அதற்காக அவரை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அம்பேத்கார் அன்ட் மோடி என்கிற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில், "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

இளையராஜாவுக்கு எதிரான கருத்து
மோடியை புகழ்வது அவரது உரிமை என்றாலும், அம்பேத்கருடன் மோடியை ஒப்பீடு செய்ததுதான் தவறு என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவந்த நிலையில், பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்ட அறிக்கையில் "இந்தியாவின் மூத்த இசைமேதையாக உள்ள இளையராஜாவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவது தமிழகத்தில் ஆளும்தரப்பிற்கு நெருக்கமானவர்கள் வசைப்பாடுவது சரியா" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பாரத ரத்னா விருது
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜா எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்ல. அவர் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

சீமான் கருத்து
ஒரு சாரார் இளையராஜாவை விமர்சித்தும், அவருக்கு கண்டனம் தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். என்னுடைய கருத்தை நான் திரும்ப பெறப்போவதில்லை என்றும் இளையராஜா கூறியுள்ளார். இளையராஜாவிற்கு ஆதரவான கருத்துக்களும் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ, புகழ்ந்து பேசினால் விருது கொடுப்போம் என்கிறார்கள் என்றார்.

இதில் நான் என்ன சொல்வது?
இளையராஜா சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. அதை ஏற்கிறோமா? எதிர்கிறோமா என்பது வேறு என்று சீமான் கூறினார். அதற்காக இளையராஜாவை விமர்சனம் செய்ய வேண்டியது இல்லை. இதை விட அதிகமாக பலரும் பிரதமர் மோடியை புகழ்ந்திருக்கிறார்கள் என்றும் சீமான் கூறினார்.
Recommended Video

இளையராஜாவை திட்டுவது யார்
இளையராஜாவை புகழ்ந்து பேசிய பலரும் இன்று அவரை திட்டுகின்றனர். மோடி போல எந்த தலைவரும் இல்லை என்று பெருமைபட பேசிய தலைவர்கள் பலரும் இருக்கிறார்கள். இளையராஜா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார் அதை விட்டு விட வேண்டியதுதான் அதை பெரிது படுத்த வேண்டியதில்லை என்று சொன்னார் சீமான்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications