இறக்கும் முன் பவதாரணியின் கடைசி வீடியோ.. மகள் சிரிப்பதை பார்த்து உடைந்து அழுத இளையராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரணி கடைசியாக சிரித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பின்னணி பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரணி கடந்த 5 மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர் இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

Ilayaraja daughter Bhavatharani last video goes trending

ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் பவதாரணி. இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தேவா ஆகியோரின் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார்.

நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படம் மூலம் இசையமைப்பாளராகவும் பவதாரணி அறிமுகமானார். இவர் தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார். பவதாரணியின் குரல் தனித்துவம் வாய்ந்தது. குயில் போல் அழகாக இருக்கும் குரலுக்கு சொந்தக்காரரான பவதாரணி அழகி படத்தில் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இளையராஜா இசையில் பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. பவதாரணி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நாளை இலங்கையில் இசை கச்சேரி இருக்கும் நிலையில் இளையராஜா இலங்கையில் இருக்கிறார்.

இந்த நிலையில் பவதாரணியின் உடல் திடீரென மோசமடைந்தது. இதையடுத்து நேற்று அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி மாலை 5.20 மணிக்கு இறந்தார். இவருடைய உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

பவதாரணியின் மறைவால் அதிர்ச்சி அடைந்த திரைத்துறையினர் அவருடைய மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். பவதாரணியின் உடலை பார்த்து இளையராஜா அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இளையராஜாவின் மகள் பவதாரணியின் கடைசி வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பவதாரணி ஏதோ ஒரு இசைக் கச்சேரிக்காக வந்துள்ளார். அவர் என்னென்ன பாடல்களை பாட போகிறார் என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு பவதாரணி மயில் போல பொண்ணு பாடலை பாட போகிறேன் என்கிறார்.

பின்னர் அவருடன் இருப்பவர்கள், ராஜா ராஜாதி ராஜன் இங்க ராஜா பாடலை பாடுமாறு கூற அதற்கு பவதாரணி கொள்ளென சிரிக்கிறார். இத்தனை மகிழ்ச்சியாக இருந்த தனது மகள் தற்போது மூச்சின்றி கிடக்கிறாரே என இளையராஜா உடைந்து போயுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+