சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட்
சென்னை: சென்னையில் மொத்தம் 15 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தான் தற்போது 6 சட்டசபை தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.

இந்த வேட்பாளர் பட்டியலின்படி முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் களமிறங்குகிறார்.
6 தொகுதிகளில் மாற்றம்
இருப்பினும் சென்னையில் 5 சட்டசபை தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்படி சென்னையில் அண்ணா நகர், ராயபுரம், எழும்பூர், திருவிக நகர், தி நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகர் - வில்லிவாக்கம் - எழும்பூர்
* அண்ணா நகரில் எம்எல்ஏவாக இருக்கும் எம்கே மோகனுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ள எம்.கே. மோகனுக்குப் பதில் நே. சிற்றரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் எம்கே மோகனின் மகன் கார்த்திக் மோகன் வில்லிவாக்கத்தில் களமிறக்கப்பட்டுள்ளார்.
* வில்லிவாக்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக வெற்றியழகன் இருந்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் மோகன் களமிறங்கி உள்ளாார். இவர் அண்ணா நகர் சட்டசபை தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான எம்கே மோகனின் மகன் ஆவார்.
* எழும்பூர் சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இ. பரந்தாமன் இருந்தார். அவருக்கு பதில் திமுகவின் தமிழன் பிரசன்னா களமிறங்கி உள்ளார்.
தி நகர் - ராயபுரம் - திருவிக நகர்
* தி.நகர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக ஜெ. கருணாநிதி உள்ளார். அவருக்கு பதில் ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
* ராயபுரம் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவாக ஐடீம் ஆர்.மூர்த்தி இருந்தார். தற்போது அவருக்கு பதில் டாக்டர சுபேர்கான் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
* திருவிக நகர் சட்டசபை தொகுதியில் சிவக்குமார் என்பவர் வேட்பாளராக இருந்தார். அவருக்கு பதில் கேஎஸ் ரவிச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை திமுக வேட்பாளர்கள் பட்டியல்
கொளத்தூர் - முக ஸ்டாலின்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்
அண்ணா நகர் - சிற்றரசு
ஆர்கே நகர் - ஜேஜே எபனேசர்
எழும்பூர் (தனி)- தமிழன் பிரசன்னா
துறைமுகம் - சேகர்பாபு
மயிலாப்பூர் - தா வேலு
பெரம்பூர் - ஆர்டி சேகர்
ராயபுரம் - சுபேர்கான்
சைதாப்பேட்டை - மா சுப்பிரமணியன்
திருவிக நகர் (தனி) - கேஎஸ் ரவிச்சந்திரன்
தியாகராயநகர் - ராஜா அன்பழகன்
ஆயிரம் விளக்கு - எழிலன் நாகநாதன்
வில்லிவாக்கம் - கார்த்தி மோகன்
விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா
வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது?












Click it and Unblock the Notifications