‛‛சென்னையில் இன்று மின்தடை’’.. வியாசர்பாடி, சோழிங்கநல்லூர், தி நகர், வேளச்சேரி மக்களே கவனம்
சென்னை: சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக வியாசர்பாடி, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, தி.நகர் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சீரான மின்வினியோகம் செய்வதற்கு ஏற்ப குறிப்பிட்ட நாட்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த பராமரிப்பு பணியின்போது மின்சாரம் நிறுத்தப்படும். இதுபற்றி மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பும் செய்யப்படும். அந்த வகையில் இன்று (புதன்கிழமை) சென்னையில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 12.06.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன்காரணமாக வியாசர்பாடி, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, தி.நகர் பகுதிகளில் மின்நியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மின்விநியோகம் கொடுக்கப்படும். அதன்படி கீழ்காணும் இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வியாசர்பாடி: (மாதவரம் லெதர் எஸ்டேட், கேகேஆர் டவுன்) கம்பன் நகர், முல்லி தெரு, தாமரை தெரு, ரோஜா தெரு, கணணேஷ் நகர், ஸ்ரீ ஸ்ரீநீவாச பெருமாள் கோவில் தெரு பழனியப்பா நகர், மேத்தா நகர், பத்மாவதி நகர், மாத்தூர், 1வது மெயின் ரோடு எம்எம்டிஏ 1 பகுதி, எடைமா நகர், ஆவின் கடியிருப்புகள், மெட்ரோ வாட்டர் பம்பு ஹவுஸ், சிஎம்பிடிடி, தாத்தாங்களம் ரோடு, தாரபந்த் அப்பார்ட்மென்ட், தேவராஜ் நகர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சித்தாலபாக்கம்: (தமிழ்நாடு நகர்ப்பு வாழ்விட மேம்பாட்டு வாரியம்) சிபிஒஎ காலனி, வீனஸ் காலனி, எம்ஜிஆர் தெரு,
எம்பாசி: (பெரும்பாக்கம்) எம்பாசி அப்பார்மெண்ட் பகுதி.
கிருஷ்ணாநகர்: (பள்ளிக்கரணை) ராஜலட்சுமி நகர், துலக்காணத்தம்மன் கோவில் தெரு, வள்ளாள பாரி நகர், ரங்கநாதபரம்,
மாடம்பாக்கம்: வேங்கைவாசல் மெயின் ரோடு, வெள்ளக்கல், நன்மங்களத்தின் ஒரு பகுதி.
அடையார்: வேளச்சேரி பைபாஸ் ரோடு, மெட்ரோ வாட்டர் முதல் விஜயா நகர் பஸஅ நிலையம் வரை, வெங்கடேஷ்வரா நகர், தேவி கருமாரியம்மன் நகர்.
தி.நகர்: தணிக்காசலம் ரோடு, தியாகராய ரோடு, பனகல்பார்க், சுப்பிரமணிய விஜயராகவாச்சாரி தெரு, கிரியப்பா சாலை பகுதி, உஸ்மான் சாலை பகுதி, ராமசந்திரன் சாலை, தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, இந்தி பிரசார சாபாவின் ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications