“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மக்களை தூண்டும் வகையில் பேசலாமா?”.. லீகல் பாயிண்ட் பிடித்த இன்பதுரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக ஆட்சியைக் கலைத்தால் புரட்சி வெடிக்கும் எனப் பேசிய நிலையில், "அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மக்களை தூண்டும் வகையில் பேசலாமா?" என அதிமுக எம்.பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் நேற்று பங்கேற்றுப் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள். அடுத்த நாளே தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும். பெண்கள் சாலைக்கு வந்து நிற்பார்கள். இது விஜய் ஆட்சி அல்ல, பெண்களின் ஆட்சி. ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற பயம் எங்களுக்கு இல்லை" எனப் பேசி இருந்தார்.

Inbadurai Criticises Aadhav Arjuna Over Revolution Would Erupt Remark

தவெக ஆட்சியைக் கலைத்தால் புரட்சி வெடிக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது சலசலப்பைக் கிளப்பியுள்ளது. அரசு விழாவில் ஒரு அமைச்சரே இத்தகைய எச்சரிக்கை விடுப்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு முரணானது என அதிமுக ராஜ்யசபா எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான இன்பதுரை தெரிவித்துள்ளார்.

இன்பதுரை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்தால் புரட்சி வெடிக்கும் என்று மக்களை தூண்டும் வகையில் பேசலாமா?

ஏற்கனவே இலங்கை, நேபாளத்தைப் போல தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும் என்று நீங்கள் வலைதளங்களில் பதிவு செய்து, காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின் அப்பதிவை நீங்களே திருத்தி, பின்னர் நீக்கி, சென்னை உயர்நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதை மறந்துவிட்டீர்களா அமைச்சரே?
(Crl.O.P. No.28737 of 2025 /
Crime No.47 of 2025)

அரசுகள் அமைவதும், நீடிப்பதும், முடிவுக்கு வருவதும் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளின்படிதான் நடக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும், ஜனநாயக நடைமுறைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓர் அமைச்சரே, அதுவும் அரசு விழாவில் - இத்தகைய எச்சரிக்கை விடுப்பது முறையல்ல! எந்த ஆட்சியும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானது அல்ல!" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+