வருமான வரி ஏலம்.. ஜெயலலிதா வீடு காப்பாற்றப்படுமா.. எடப்பாடி, ஓபிஎஸ் தலையிடுவார்களா?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து, ரூ.20 கோடி செலுத்த வேண்டியுள்ளதாக, வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. ஜெயலலிதா தங்கள் உயிர் என்றும், ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசுகள் என்றும் கூறும் தலைவர்கள், அதை ஏலம் விடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்விகளை அரசியல் நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி, 13 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் மற்றொரு வாரிசான தீபக்கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2026 ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கி 11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் 6 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாகக் கூறி, ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் வருமான வரித் துறை பதில் மனுவில் கூறியிருந்தார்.
வரி பாக்கிக்காக, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே சில சொத்துகள் முடக்கப்பட்டிருந்தது.. வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு, பிப்ரவரி 18-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.
இதனிடையே ஜெயலலிதா தங்கள் உயிர் என்றும், ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசுகள் என்றும் கூறும் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர், அதை ஏலம் விடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்விகளை அரசியல் நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். அதேபோல் ஜெயலலிதாவின் வீடு தீபாவிற்கு இப்போது சொந்தமாக இருந்தாலும், அவரது வீட்டைக் காப்பாற்ற, ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் இப்போது தலையிடுவார்களா என்று கேள்வியையும் சில அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications