சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 4ஆவது நாளாக தொடரும் ரெய்டு..சல்லடை போட்டு தேடும் அதிகாரிகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய கடைகளில் 4ஆவது நாளாக இன்றும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.

தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் சோதனை கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்களை இன்னும் அதிகாரிகள் விவரிக்கவில்லை.

இந்த நிறுவனம் 1969 ஆம் ஆண்டு பாத்திரக் கடையாக தொடங்கப்பட்டது. அப்படியே சிறிது சிறிதாக மற்ற பொருட்களையும் வாங்கி பல்பொருள் அங்காடியாக தமிழகம் முழுவதும் விஸ்தரித்து உள்ளது. இந்த நிறுவனம் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. நிறுவனம் மெல்ல வளர்ந்து தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரிலும் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித் துறை ரெய்டு... சென்னை கடைகளில் அதிகாரிகள் அதிரடி சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித் துறை ரெய்டு... சென்னை கடைகளில் அதிகாரிகள் அதிரடி

ஹேர்பின்

ஹேர்பின்

இந்த கடைகள் 7 மாடிகளை கொண்டுள்ளதால் ஹேர்பின் முதல் ஹேண்ட்பேக் வரை, பர்னிச்சர் பொருட்கள், தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் உள்ளிட்டவை இங்கு கடக்கும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கடைகளில் லட்சக்கணக்கானோர் வருகை தருவர். அது போல் சனி, ஞாயிறுகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.

சரவணா செல்வரத்தினம்

சரவணா செல்வரத்தினம்

இந்த கடையை போல் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகியவை உள்ளன. இவற்றை சகோதரர்களின் குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்னம் ஆகியவற்றின் சென்னை கிளைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

4ஆவது நாளாக சோதனை

4ஆவது நாளாக சோதனை

கடந்த புதன்கிழமை காலையில் உள்ளே சென்ற அதிகாரிகள் இன்று 4 ஆவது நாளாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வரி ஏய்ப்பு கணக்கில் வராத முதலீடு உள்ளிட்டவை காரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான 10 க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.

அண்ணாச்சி கடைகள்

அண்ணாச்சி கடைகள்

2019 ஆம் ஆண்டு ஏற்கெனவே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கடைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக ரெய்டு நடந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தி நகர், பாடி உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ரூ 434 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்டவை கணக்கில் வராத பணம் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் கடைகளில் ரெய்டு நடத்தப்படுகிறது. 4ஆவது நாளாக நடத்தப்படும் இந்த சோதனையில் என்னென்ன சிக்கியது என்பது குறித்தும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா என்பது குறித்தும் தெரியவில்லை.

English summary
Income Tax raid are being conducted for the 4th day in Super Saravana Stores and Selvarathinam stores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X