Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

Recommended Video

    ஐ.டி. அதிகாரிகளின் அதிகாலை அதிரடி.. பால் தினகரன் சொந்தமான 28 இடங்கள்.. ‘பலே’ ரெய்டு..!

    சென்னை பாரிமுனை, அடையாறு, காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை திடீரென நடத்தி வரும் சோதனைகளால் பரபரப்பு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.

    ஏசு அழைக்கிறார்

    ஏசு அழைக்கிறார்

    இயேசு அழைக்கிறார் என்று பால் தினகரன் நடத்தி வரும் கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.

    மத போதனை

    மத போதனை

    இவரது தந்தை டிஜிஎஸ் தினகரன் தான் இயேசு அழைக்கிறார் அமைப்பை தொடங்கினார். தினகரன். மத போதனையிலும் ஈடுபடத் தொடங்கினார். திருமணத்திற்குப் பின் மனைவி ஸ்டெல்லாவுடன் இணைந்து பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தினார். அவர்களது வழியில் தான் அவரது மகனான பால் தினகரனும் சிறப்புப் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    ஐடி ரெய்டு

    ஐடி ரெய்டு

    பால் தினகரன் தற்போது காருண்யா பல்கலைக்கழகத்தின் தாளாளராக உள்ளார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இன்று திடீரென பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    வரி ஏய்ப்பு

    வரி ஏய்ப்பு

    வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரி சோதனைகள் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. வருமான வரித்துறை இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+