தமிழ்நாட்டில் ரெய்டு விடும் ஐடி.. இன்று 60 இடங்களில் சோதனை - ஆம்பூர்,வேலூர் தோல் தொழிற்சாலைக்கு குறி
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை, இன்று காலை இந்தியாவின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான பரிதா குழுமத்துக்கு தொடர்புடைய 60 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், முறைகேடான வருமானம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அடுத்தடுத்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடரும் ரெய்டுகள்
அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள், அரசு காண்டிராக்டர் செய்யாதுரைக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கே.சி.சந்திரசேகர் வீட்டில் சோதனையிட்டது வருமான வரித்துறை.

60 இடங்களில் ரெய்டு
இந்த நிலையில், இன்று காலை சென்னை, புதுச்சேரி, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் ஃபரிதா குழுமத்துக்கு தொடர்புடைய 60 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளார்கள்.

வரி ஏய்ப்பு புகார்
ஃபரிதா குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் பெருமுகையில் அமைந்திருக்கு கே.ஹெச். என்ற காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் பெரியமேடு, அரும்பாக்கம், பூந்தமல்லி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஃபரிதா குழுமம்
பல்லாயிரம் கோடி மதிப்பில் உலக நாடுகளுக்கு காலணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது ஃபரிதா குழுமம். ஃபரிதா மற்றும் கே.ஹெச். காலணி நிறுவனங்களுக்கு சொந்தமாக பல நாடுகளில் 15 க்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் ஷூ, பெல்டு, செருப்பு, உயர் ரக தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications