எல்லாத்துக்கும் ஆதாரம் கொடுங்க.. திறக்கப்பட்ட வருமான வரி ITR போர்ட்டல்.. கடுமையாக்கப்பட்ட விதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி ITR பக்கத்தின் E Filling திறக்கப்பட்டு உள்ள நிலையில் வருமான வரி பிரிவின் ஒவ்வொரு பக்கமும் கடினமாக்கப்பட்டு உள்ளது.

வீட்டு லோன் தொடங்கி அனைத்து வகையான முதலீடுகளுக்கு நம்பர் கொடுக்க வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது கடந்த வருடங்கள் போல வெறுமனே முதலீடுகளை ஆதாரம் இல்லாமல் கொடுக்க முடியாது. நீங்கள் கணக்கு காட்டு முதலீடுகள் உண்மையில் மேற்கொள்ளப்பட்டதா என்று சோதனை செய்யப்படும்.

budget 2025 budget nirmala sitharaman 2025 2025

லோன் உள்ளதாக காட்டப்படும் கணக்குகள் முறையானதா என்று சோதனை செய்யப்படும். 1 லட்சத்திற்கு மேல் வீட்டு வாடகை இருக்கும் பட்சத்தில்.. நீங்கள் தரக்கூடிய பான் கார்டை வைத்து சோதனை செய்வார்கள். அதாவது நீங்கள் சொல்லும் வாடகைக்கு கணக்கு சரியானதா என்று சோதனை செய்வார்கள்.

திறக்கப்பட்ட பக்கம்

வருமான வரி ITR பக்கத்தின் E Filling திறக்கப்பட்டு உள்ளது. பார்ம் 1 மற்றும் 4க்கான பக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அதாவது சம்பளதாரர்கள், HUFகள், மற்றும் பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் இதன் மூலம் வருமான வரி தாக்கலை மேற்கொள்ள முடியும். இன்றில் இருந்து வருமான வரி ITR இதனால் தாக்கல் செய்ய முடியும்.

ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய வருமான வரி ITR இன்றுதான் தொடங்கி உள்ளது. ITR தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15ம் தேதியாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருமான வரி ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் பார்ம் 16 சம்பளதாரர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல சம்பளதாரர்கள் தங்கள் நிறுவனத்திடம் இருந்து படிவம் 16 அல்லது TDS சான்றிதழைப் பெற காத்திருக்கிறார்கள். படிவம் 16 என்பது ஒரு முக்கியமான TDS சான்றிதழாகும். ஒரு நிதியாண்டில் பணியாளருக்கு செலுத்தப்பட்ட சம்பள வருமானம், மூலத்தில் வரி விலக்கு பெறத் தேர்ந்தெடுத்த வரி முறை மற்றும் ஊழியர் சம்பள வருமானத்திலிருந்து கோரிய விலக்குகள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.

படிவம் 16 என்பது பணியாளர் ஒருவருக்கு மூலத்தில் கழிக்கப்பட்ட வரியின் சான்றிதழாகும். எந்த ஒரு நிறுவனமும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் படிவம் 16 ஐ வழங்குவது கட்டாயமாகும். படிவம் 16 ஐ சரியான நேரத்தில் வழங்கத் தவறினால், தவறும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நாளைக்கு ரூ. 500 அபராதம் அந்த நிறுவனத்திற்கு விதிக்கப்படும். சிலருக்கு மூலத்தில் வரி கழிக்கப்படும் (TDS) சான்றிதழ்கள் தரப்பட வேண்டும் . இதற்கு மே 31க்கு பிறகே அதற்கு விண்ணப்பிக்க முடியும். அது வருவதற்கு எப்படியும் ஜூன் 2ம் வாரம் ஆகிவிடும். எனவே பார்ம் 16 பொதுவாக ஜூன் 15ம் தேதிக்கு முன்பாக உங்கள் நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

வருமான வரி தாக்கல்

பழைய வருமான வரி முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

உங்களின் சம்பளத்தின் முதல்

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+