2 மேஜர் அறிவிப்புகள்.. 11 ஆயிரம் வரப்போகுது.. இளைஞர்கள் + பெண்களுக்கு.. ஸ்டாலின் சொன்ன ஸ்வீட் நியூஸ்
சென்னை: சென்னையில் சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்தியாவின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தி பேசினார். இந்த 77 வது சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு தகை சால் விருது வழங்கி சிறப்பித்தார்.
சென்னை கோட்டை கொத்தளத்திற்கு மிகுந்த பாதுகாப்புடன் வருகை தந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து சென்னை கோட்டையில் 3-வது முறையாக தேசியக் கொடியேற்றினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், முதல்வராக 3-வது முறையாக நான் தேசியக் கொடி ஏற்றி வைத்துள்ளேன். 400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுவதில் பெருமை அடைகிறேன்.
கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். இந்திய நாட்டின் முக்கிய அங்கம் தமிழ்நாடு. குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அவ்வாறு செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும். விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடுதான் விடுதலை போராட்டத்திற்கான விதையை முதலில் விதைத்தது. நடப்பாண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம்.
மாநிலங்களுக்கு மாநிலம், உணவு, பண்பாடு, மொழியில் மாறுபாடு உள்ளது. மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவை களைய முயன்றவர் மகாத்மா காந்தி. நாட்டின் வளர்ச்சி பெண்களிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
அனைவருக்குமான அரசாக, அனைவரின் வளர்ச்சிக்குமான அரசாக செயல்பட்டு வருகிறோம். அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு விடியல் பயணம் திட்டம் என பெயர் சூட்டல். மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், ராணுவத்தில் இருந்து திரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும், ஸ்விகி, ஸொமட்டோ ஊழியர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும், ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 1லட்சம் மானியம் அறிவிக்கப்படும், என்று சென்னை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
இரண்டு முக்கிய அறிவிப்பு: விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நடப்பாண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications