ஜனநாயகம் என்ற போர்வையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது.. எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
சென்னை: நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆன்மாவும், அழகும் விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் தான் அடங்கியுள்ளது, ஆனால் விவாதங்களே இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் ஃபைஸி கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் ஃபைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆன்மாவும், அழகும் விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் தான் அடங்கியுள்ளன. கெடுவாய்ப்பாக, வலதுசாரி பாசிச வாதிகளின் ஆட்சியில் கீழ் உள்ள உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் பழங்கதைகளாக மாறி விட்டன. ஜனநாயகத்தின் ஒவ்வொரு சிறப்பியல்பான அம்சங்களையும் ஒன்றிய பாஜக அரசு சன்னஞ் சன்னமாக அழித்து வருகிறது.

பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருந்த இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், எதிர்க்கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரை இடை நீக்கம் செய்து எதிர்க்கட்சிகள் இல்லாத கூட்டத்தொடராக மாற்றப்பட்டது. இந்தியத் தந்திச் சட்டம் 1885க்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட தொலைத்தொடர்பு மசோதாவைத் தவிர, சட்ட வல்லுநர்கள் மற்றும் சட்ட அறிஞர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டு திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் இந்த அமர்வில் தாங்கல் செய்யப்பட்டு எதிர்கட்சிகள் இல்லாத நிலையில் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளன.
குற்றவியல் சட்ட மசோதாக்கள் மீதான விவாதங்களுக்கு அரசு அச்சப்படுகிறது. அவற்றின் சில பிரிவுகள் பழைய குற்றவியல் சட்டங்களை விட கடுமையாகவும், பயங்கரமாகவும் உள்ளன. இந்த மூன்று மசோதாக்களும், தொலைத்தொடர்பு மசோதாவும் விவாதமின்றி மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, குற்றவியல் சட்ட மசோதாக்களை பாராளுமன்ற சப்ஜெக்ட் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஜனநாயகம் என்ற போர்வையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது. வெளிப்படைத்தன்மை இல்லாத தொலைத்தொடர்பு மசோதாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைப் பயன்படுத்தும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் செய்திகளை இடைமறித்து அல்லது பரிமாறிக்கொள்ளாத வகையில் விதிமுறைகளை கொண்டுவந்து ஒன்றிய அரசு தனிநபர் தகவல் தொடர்புகளில் கூட தலையிட திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
வன்முறைக்கான சாத்தியம் இருப்பதாலோ அல்லது ஏற்கனவே வன்மூறை நடக்கிறது என்பதற்காகவோ அல்லாமல், இணையத்தை முடக்குவதன் மூலம் மக்கள் எதிர்ப்பைத் தடுக்க இந்த மசோதா அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது. தேசிய பாதுகாப்பை சுட்டிக்காட்டி எந்தவொரு தொலைத்தொடர்பு வலையமைப்பிலும் தகவல் தொடர்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
நாட்டில் இருந்து ஜனநாயகம் அழிக்கப்படுவது குறித்து எஸ்டிபிஐ கட்சி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், வரும் பொதுத் தேர்தலில் பாசிசவாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றவும், பாஜக அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளுக்கு ஒரு உத்வேகமாக மாற வேண்டும்." இவ்வாறு அப்துல் மஜீத் ஃபைஸி தெரிவித்துள்ளார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications