சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் அதி வேக ரயில்.. வாவ் வாவ் வசதிகள்!

சென்னையில் இந்தியாவின் அதிவேக ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெயருடன் கூடிய நவீன ரயிலின் பெட்டிகள் சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மாடர்ன் ரயிலுக்கு ''டிரெய்ன் 18'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தற்போது இந்தியாவின் அதிவேக ரயிலாக சதாப்தி ரயில் உள்ளது. கடந்த 30 வருடமாக இந்த ரயில் ஓடிக் கொண்டுள்ளது. இந்த சாதனையை தற்போதைய புதிய ரயில் முந்தவுள்ளது.

என்ன வேகம்

என்ன வேகம்

இந்த ரயில் 150-160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதற்கு முன் இவ்வளவு வேகத்தில் செல்லும் ரயில் உருவாக்கப்பட்டதே இல்லை. இது சென்னையில் உருவாக்கப்பட்டு இருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

சூப்பர் வசதிகள்

சூப்பர் வசதிகள்

இந்த ''டிரைன் 18'' முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்டது. அதேபோல் இதில் அனைத்து பெட்டிகளிலும் இலவச அதிவேக வைபை வசதி உள்ளது. அதிநவீன டாய்லெட் வசதி இருக்கிறது. தானாக திறக்கும் கதவுகள் உள்ளது. வெளிநாடுகளில் உள்ளது போல் ஜன்னல்கள் முழுக்க முழுக்க கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.

சூப்பர் பாஸ்

சூப்பர் பாஸ்

மெட்ரோவில் இருப்பது போலவே இதன் உட்பக்கம் ஒளிவிளக்குகள் இருக்கும். ஏசியும் கூட அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நகரும் படிக்கட்டுகள் இருக்கிறது. இதில் இருக்கும் ஜிபிஎஸ் காரணமாக பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தை எளிதாக அடையாளம் காண முடியும். அனைத்து சீட்டிற்கும் அடியில் சார்ஜிங் பாயிண்ட் இருக்கும்.

இன்ஜின் இல்லை

இன்ஜின் இல்லை

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் இன்ஜின் இல்லை என்பதுதான். மின்சார மூலம் இயங்கும் இது, மெட்ரோ போலவேதான் செயல்படும். இதற்கு செல்ப் புரோபல்ட் ரயில் என்று பெயர். இதுதான் இந்தியாவின் முதல் செல்ப் புரோபல்ட் ரயில். அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா இருக்கிறது.

சீட் வசதிகள்

சீட் வசதிகள்

இதில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளது. நடுவில் 2 பெட்டிகள் சிறப்பு இருக்கை உள்ள பெட்டிகள். மீதமுள்ள 14 பெட்டிகள் ஜெனரல் வகுப்பு பெட்டிகள் ஆகும். ஆனால் இவை அனைத்து மிக அதி நவீனமாக இருக்கும். சிறப்பு இருக்கை பெட்டியில் 56 இருக்கைகள் இருக்கும். ஜெனரல் வகுப்பில் 78 இருக்கைகள் இருக்கும்.

வாவ்

வாவ்

இதில் இருக்கும் தானியங்கி கதவுகள் நாம் உள்ளே சென்றால்தான் மூடும். கதவு மூடிய பின் மட்டுமே வண்டி நகரும். மெட்ரோ போலவே செயல்படும். அதேபோல் இதில் பொருட்களை வைத்துக் கொள்ளவும், எடையை ஏற்றவும் தனி பகுதி வைக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வளவு இருக்கா

இவ்வளவு இருக்கா

இதை உருவாக்க 100 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. இது பிரான்ஸ் மற்றும் சீனா, மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பம் கலந்து உருவாக்கப்பட்டது ஆகும். இது சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு சோதனை ஓட்டம் செய்யப்பட இருக்கிறது.

English summary
India's 'Fastest' Train made in Chennai with ultimate technologies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X