இபிஎஃப்ஓ கணக்கு இருக்கா? வருது வட்டி.. நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. கொட்டும் பணம்
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO உறுப்பினர்களின் கணக்குகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான 8.25% வட்டி இந்த வாரத்திற்குள் வரவு வைக்கப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு பரிந்துரைக்கப்பட்ட வட்டியை அங்கீகரித்த பிறகு, EPFO அதன் உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டியை வரவு வைக்கிறது.
நடப்பு நிதியாண்டில், 8.25% வட்டி விகிதத்திற்கான அரசாங்க ஒப்புதல் மே 22, 2025 அன்று வந்தது. இதையடுத்து EPFO ஆயத்தப் பணிகளைத் தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி இரவு முதல் ஆண்டு கணக்குகளைப் புதுப்பிக்கத் தொடங்கியது.

இது தொடர்பாக மாண்டவியா கூறுகையில், "இந்த ஆண்டு, 13.88 லட்சம் நிறுவனங்களின் 33.56 கோடி உறுப்பினர் கணக்குகளுக்கான வருடாந்திர கணக்கு புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. அதில் ஜூலை 8 ஆம் தேதி வரை, 13.86 லட்சம் நிறுவனங்களின் 32.39 கோடி உறுப்பினர் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது 99.9% நிறுவனங்களுக்கான வருடாந்திர கணக்கு புதுப்பித்தல் மற்றும் 96.51% உறுப்பினர் கணக்குகளுக்கான புதுப்பித்தல் பணியை நிறைவுசெய்யப்பட்டு உள்ளது", என்று தெரிவித்தார். மேலும், முந்தைய ஆண்டில் (2023-24), வட்டி வரவு வைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி டிசம்பரில் தான் நிறைவடைந்தது. ஆனால், இந்த ஆண்டு எல்லாம் கணினிமயமாக்கப்பட்ட காரணமாக, இந்த செயல்முறை ஜூன் மாதத்திற்குள்ளேயே பெருமளவில் நிறைவடைந்துள்ளது என்றார்.
மீதமுள்ள கணக்குகள் இந்த வாரத்திற்குள் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மாண்டவியா கூறினார். பிப்ரவரி 28 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற EPFO மத்திய அறங்காவலர் குழுவின் 237 ஆவது கூட்டத்தில், 2025 நிதியாண்டிற்கான EPFO வட்டி விகிதத்தை 8.25% ஆகத் தக்கவைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு மாண்டவியா தலைமை தாங்கினார். இந்த முன்மொழிவு பின்னர் நிதி அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. பிப்ரவரி 2024 இல், EPFO 2023-24 ஆம் ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக உயர்த்தியது, இது 2022-23 இல் 8.15% ஆக இருந்தது.
EPFO ஆட்டோமெட்டிக் முறையில் தரப்படும் செட்டில்மென்டுகள், அதாவது கூடுதல் பரிசோதனை இல்லாமல், அடிப்படை பரிசோதனைகளை மட்டும் வைத்து வழங்கப்படும் செட்டில்மென்டுகளுக்கான தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதாவது நீங்கள் உங்களின் பிஎஃப் பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பணத்தை தர கூடுதல் சோதனைகள் இருக்காது. எப்போதும் செய்யப்படும் பான் கார்டு சோதனை, வங்கி கணக்கு சோதனை ஆட்டோமெட்டிக் முறையில் செய்யப்படும். அதன்படி தானாக 3 நாட்களில் உங்கள் கணக்கிற்கு பணம் வந்துவிடும்.
வேகம் காட்டும் பிஎஃப்
ஏற்கனவே EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் க்ளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆட்டோ மோட் முறையில் இத்தனை கிளைம்களை நிறைவேற்றி உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.
இப்போது, 60 சதவீத அட்வான்ஸ் (திரும்பப் பெறுதல்) EPFO உரிமைகோரல்கள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகின்றன என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார். இதனால் வேகமாக பணம் மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அதாவது அதிகாரிகள் சோதனை செய்யாமல் தானாக கணினியே ஆவணங்களை சோதனை செய்து 3 நாட்களில் பணத்தை வழங்கிவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications