அப்படி போடு.. அடுத்த 2 மாதம் ரொம்ப முக்கியம்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்த நல்ல செய்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு இதே வட்டி விகிதம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தற்போது 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 21 ஆண்டுகள் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க முடியும். இந்த வட்டி இப்போதைக்கு குறைக்கப்படாது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

selvamagal saving scheme selvamagal semippu thittam narendra modi

மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

எப்படி சேமிப்பது?

10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

வட்டி குறையாது

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு இதே வட்டி விகிதம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தற்போது 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 21 ஆண்டுகள் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க முடியும். இந்த வட்டி இப்போதைக்கு குறைக்கப்படாது.

ஜூன் மாதம் இந்த வட்டி மாற்றப்படும். ஏப்ரல் மாதம் மாற்றப்பட வேண்டிய வட்டி மாற்றப்படவில்லை. இதனால் அடுத்த 2 மாதங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் கணக்கைத் தொடங்க பெரிய தொகை தேவையில்லை. வெறும் ₹ 250 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் ₹ 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் எதாவது சில வருடங்கள் முதலீடு செய்ய முடியாவிட்டால், ₹ 50 அபராதம் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்படுத்தலாம்.

இந்த திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சேர்த்துவிட்டீர்கள்.. 21 ஆண்டுகள் தொகை முதிர்ந்துவிட்டது என்றால் அந்த வருடமே பணத்தை எடுக்க வேண்டும். எடுக்காமல் வைத்து இருந்தால்.. 21ம் ஆண்டுக்கு பின் வட்டி வழங்கப்படாது. கூடுதலாக 1 ரூபாய் கூட வட்டி கிடைக்காது. அதுவரை வந்த வட்டி + சேமிப்பு தொகை மட்டுமே இருக்கும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், நீங்கள் குறைந்தது 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, மொத்தமாக கணக்கு 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் முதிர்ச்சியடையும். நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, பெற்றோர்கள் கூடுதல் முதலீடு செய்யத் தேவையில்லை. மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு, கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.

திட்டம் குறித்த முக்கிய தகவல்

அதேபோல் இடைப்பட்ட காலத்தில் திட்டம் தொடங்கப்பட்ட பெயர் கொண்ட அந்த பெண், சிறுமி வெளிநாட்டிற்கு சென்று அங்கே குடியுரிமை பெற்றுவிட்டார் என்றால் அவருக்கு வட்டி அதோடு நிறுத்தப்படும், இந்த குடியுரிமை இதற்கு அவசியம். அதாவது 21 ஆண்டு வரை வெளிநாட்டில் வேலை பார்க்கலாம். அதுவரை அங்கே குடியுரிமை பெற முடியாது. அதோடு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு வைத்து உள்ள அந்த பெண், சிறுமி இறந்துவிட்டால், வட்டி நிறுத்தப்பட்டு, கணக்கு மூடப்பட்டு, பாதுகாவலருக்கு அல்லது பெற்றோருக்கு பாக்கி வழங்கப்படும்.

திட்டத்தின் வேறு அம்சங்கள்

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+