செஸ் ஒலிம்பியாட்.. வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்.. தனுஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட போட்டியாளர்கள்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டுப்புற நிகழ்ச்சிகளில், சர்வதேச வீரர்களும் கலந்துகொண்டு ஆடியுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐந்து சுற்றுகளுக்கான போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பாதையில் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு நாளும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த செய்திகள் மக்களிடையே ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.
அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஐந்து சுற்றுகளுக்கான முடிவு தெரிய வந்துள்ளதால், தவறுகளை திருத்தி புள்ளிகளைப் பெறுவதில் வீரர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இதனால் செஸ் அரங்கமே மிகவும் பதற்றமான சூழலில் இருக்கிறது.
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாடு வந்துள்ள சர்வதேச செஸ் வீரர்களுக்கு தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை தெரியப்படுத்தும் வகையில், மாநில அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக உணவுகளை ருசி பார்த்து வியந்து போயுள்ளனர்.
இந்த சூழலில் சர்வதேச போட்டியாளர்களுக்காக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக சுற்றுலாத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, மாலை நேரத்திற்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர்.
அதேபோல் தமிழக கானா பாடல்கள், பிரபல சினிமா பாடல்களுக்கும் நடன கலைஞர்கள் நடனமாடினர். இதனைப் பார்த்து உற்சாகமடைந்த வெளிநாட்டு செஸ் வீரர்கள், நடன கலைஞர்களுடன் இணைந்து கரகம் எடுத்து நடனமாடியது உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல், கலை நிகழ்ச்சியின் கடைசியில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் பாடலுக்கு, சர்வதேச வீரர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு நாளும் தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை சர்வதேச வீரர்களுக்கு எடுத்து கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications