அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 17 Pro Max-ஐ கிப்ட் கொடுத்த சீன நிறுவனம்! இந்தியாவின் நிலைமையை பாருங்க
சென்னை: இந்தியா உட்பட, உலகம் முழுவதும் வேலை நீக்கம் பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது. இந்நிலையில், சீன நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் அனைவருக்கும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மொபைலை கிப்ட்டாக கொடுத்திருக்கும் சம்பவம் கவனம் பெற்றிருக்கிறது.
சீனாவின் மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் பான் (Tim Pan), ஊழியர்கள் அனைவருக்கும் புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அவர் சொன்னதை போலவே, நிறுவனத்தில் பயிற்சிக்காக சேர்ந்த இன்டர்ன் ஊழியர் உட்பட அனைவருக்கும் மொபைலை கிப்ட்டாக கொடுத்திருக்கிறார்.

கலிபோர்னியாவின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடந்த ஆப்பிள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட இந்த நிறுவனத்தின் ஊழியர், "டிம் உண்மையிலேயே உலகின் சிறந்த முதலாளி!" என புகழ்ந்தார்.
ஒவ்வொரு ஊழியரும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அல்லது விரும்பிய வேறு மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். சீனாவில் நிறுவனங்கள் தரும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படுவதால், அந்தச் செலவுகளையும் மீடியாஸ்டார்ம் நிறுவனமே செலுத்தும் பான் கூறியிருக்கிறார்.
ஊழியர்களுக்கு ஆப்பிள் தயாரிப்புகளை அளிக்கும் அவரது தாராள குணம் இது முதல் முறையல்ல. 2024இல் சுமார் 100 மீடியாஸ்டார்ம் ஊழியர்களுக்கு ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 வழங்கப்பட்டது. அப்போதும் அதற்கான வரிகளை நிறுவனமே செலுத்தியது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. இருப்பினும் தற்போது சோஷியல் மீடியாக்களில் மீண்டும் பரவலாக ஷேராகி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வேலை நீக்கமும், சம்பள உயர்வுக்கான போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், இந்த செய்தி ஷேர் செய்யப்பட்டு, இந்தியாவில் உங்கள் நிறுவனம் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருகின்றனர்.
இந்தியாவில் நிலைமை என்ன?
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில், நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஏற்கெனவே வாங்கிய ரூ.12000 சம்பளம் போதவில்லை என்றும், கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இந்த போராட்டம் காரணமாக வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன.
நீங்கள் சொல்லுங்க மக்களே! உங்கள் நிறுவனம் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது? வித்தியாசமான அனுபவங்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications
