டு பிளஸ்சியை கோட்டை விட்ட சிஎஸ்கே.. மிக்சர் திங்கவா அங்க போனீங்க.. கடுப்பாகி விளாசும் நெட்டிசன்கள்
சென்னை : ஐபிஎல் மெகா ஏலத்தில் பல அணிகள் போட்டி போட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நேரத்தில், சிஎஸ்கே அணி நிர்வாகம் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாத நிலையில், அணியின் முக்கிய வீரரான பாஃப் டு பிளஸ்சிஸை தவற விட்டுள்ளது. இந்நிலையில் மிக்சர் திங்கவா அங்க போனீங்க என சென்னை அணி நிர்வாகத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Recommended Video
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று. 12 மணிக்கு தொடங்கிய ஏலத்தில் 10 அணிகள் போட்டி போட்டு வீரர்களை தேர்வு செய்தனர்.
289 வீரர்கள் ஏலத்தில் விடப்பட உள்ள நிலையில் சுமார் 500 கோடி ரூபாய் பணத்துடன் அணி நிர்வாகங்கள் களத்தில் இறங்கினர்.

ஐபிஎல் மெகா ஏலம்
ஆரம்பம் முதலே ஏலத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்திய வீரர் ஷிகர் தவன் முதல் வீரராக ஏலம் விடப்பட்ட நிலையில், அவரை சுமார் 8 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. காகிசோ ரபாடா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஏலம் விடப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் இருந்தே அமைதி காத்து வந்தது. ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் உள்ளிட்டோரை ஏலம் விட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

பெரும் பின்னடைவு
தொடர்ந்து பாப் டூ பிளஸ்சி ஏலம் விடப்பட்ட போது அவரை சென்னை அணி தவறவிட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலந்து கொள்ளாத நிலையில் அவர் வகுத்துக் கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் சிஎஸ்கே நிர்வாகம் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
பாப் டு ப்ளசி இல்லாத சென்னை அணி நிலை இனி பரிதாபம் தான் என பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக்சர் திங்கவா ஏலத்திற்கு சென்றது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக ஏலத்திற்கு முன் ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்ட சென்னை அணி நிர்வாகம்இடத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.. வீரர்களின் நல்ல கலவையை (மிக்சர்) எதிர்பார்க்கலாம் விசில் போடு என பதிவிட்டு இருந்தது. அந்தப் புகைப்படத்தில் மிச்சர் தட்டு ஒன்று இடம்பெற்றிருந்தது. அதை வைத்து ஏலத்திற்கு மிக்சர் திங்கவா போனீர்கள் என விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.

கலக்கும் மீம்ஸ்
மேலும் டூபிளஸ்சியை இழந்ததை மீம்ஸ்கள் மூலமும் வறுத்தெடுத்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், மிக்சர் தட்டோடு போகும்போதே நினைச்சேன் எனவும், மன்மதன் படத்தில் சிம்பு கதறும் புகைப்படங்களை வைத்தும் மீம்ஸ்களை உருவாக்கி நெட்டில் பரப்பி விட்டுள்ளனர். மேலும் ஏலம் எடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, விலையை ஏற்றியாவது விடுங்கள் என கலாய்த்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications