சீரியஸாகும் மேட்டர்.. மேலிடம் பறக்கும் "அந்த" ரிப்போர்ட்.. போட்டுடைத்த மாஜி.. டென்ஷனில் திமுக
திமுக ஊழல் அமைச்சர்கள் குறித்து புகார் அனுப்ப உள்ளதாக ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டியால், திமுக தரப்பிற்குள் லேசான கலக்கம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, பல அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. அதில் ஒன்றுதான் அதிமுக மாஜிக்களின் மீதான ஊழல் புகார்கள், ரெய்டுகள், கைது நடவடிக்கைகள்..!
இது அதிமுகவுக்கு பெருத்த தலைவலியாக மாறி வருகிறது.. தங்களின் ஊழல் வழக்குகள், மற்றும் புகார்கள் குறித்து தூசி தட்டி எடுத்து வரும் திமுகவை சிக்க வைக்க பலவாறு முயற்சித்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதற்காக திமுக தரப்பு மீதும் ஊழல் புகார்கள் அள்ளி வீசப்பட்டன.. இதை முதன்முதலில் ஆரம்பித்து வைத்ததே எடப்பாடி பழனிசாமிதான்.. பொங்கல் பரிசு திட்டத்தில் 500 கோடி ஊழல் என்று திமுக மீது செல்லுமிடமெல்லாம் புகார் சொல்லியிருந்த நிலையில், கோர்ட்டுக்கு போய் திமுக மீது வழக்கையும் தொடுத்துள்ளனர்.. அப்போது முதல் இப்போதைய முதல்வரின் துபாய் பயணம் வரை திமுகவை சீண்டி கொண்டே உள்ளது.

எடப்பாடி புகார்
அதிலும், எடப்பாடி பழனிசாமி திமுகவை குறை சொல்வதைவிட, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒருபடி மேலே போய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.. ஊழல் செய்த 5000 கோடி பணத்தை துபாயில் முதலீடு செய்யவே முதலமைச்சர் தனது குடும்பத்துடன் துபாய் சென்றதாக எடப்பாடி பழனிசாமியும், ஜெயக்குமாரும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இப்போது இன்னொரு குண்டை தூக்கி திமுக பக்கம் வீசியுள்ளார் ஜெயக்குமார்.

கையெழுத்து
ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக ராயபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜெயக்குமார் வந்திருந்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "ராத்திரியோடு ராத்திரியாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.. இது மக்களுக்கு சுமையாக விழுந்துள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்படுத்தி தான் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அரசு எதற்கு? தமிழக அரசு பொருளாதார மேதைகளை நியமித்து 300 நாட்கள் ஆகிறது. ஆனால் பொருளாதார நடவடிக்கையை மீட்க எந்தவித நடவடிக்கையும் இப்போது வரை இல்லை.

மின்கட்டணம்
வரியையும் உயர்த்தாமல் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியது அதிமுக அரசுதான்... அதிமுக ஆட்சியில் எந்த வித கட்டணமும் உயர்த்தப்படவில்லை.. ஆனால் வரக்கூடிய நாட்களில் மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை இவை எல்லாமே உயர போகிறது.. அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்துவரி உயர்ந்த பரிந்துரைத்த நிலையில், அப்போது ஸ்டாலின் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தாரே...!

அறிவாலயம்
ஆனால் இப்போது ராத்திரியோடு ராத்திரியாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.. மொத்தத்தில் மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது... இந்த ஆட்சி போகிற போக்கைப் பார்த்தால் 5 வருடம் முடியும்போது கூடுதலாக 5 லட்சம் கோடி கடனாக மாறும்.. அதிமுக ஆட்சியில் தன்னந்தனியாக இரவு நேரத்தில் பெண்கள் நடமாட முடியும்.. ஆனால் திமுக ஆட்சியில் பட்டப்பகலிலேயே கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது.

எடப்பாடி பழனிசாமி பலம்
மனிதர்கள் சுதந்திரமாக நடமாடிய ஆட்சி அதிமுக ஆட்சிதான். சர்க்காரியா ஆணையம் அமைத்தது போல இப்போதைய திமுக ஆட்சியில் ஊழல்களை ஆதாரத்துடன் தொகுத்து விசாரிக்க மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம்... திமுக அரசின் தவறுகளை தொகுத்து, மத்திய அரசிடம் வழங்குவோம். திமுகவின் ஊழல்களை

ஹாட் அறிவாலயம்
ஆதாரங்களுடன் மத்திய அரசுக்கு அனுப்புவோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்" என்றார். ஜெயக்குமார் இப்படி சொல்லி உள்ளது திமுகவுக்குள் லேசான கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. ஜெயிலுக்கு சென்று வந்த ஆதங்கத்தில் ஜெயக்குமார் இப்படி சொல்கிறார் என்று ஒருபக்கம் நினைத்தாலும், பக்கபலமாக எடப்பாடி பழனிசாமி உள்ளதால், லிஸ்ட் விரைவில் தயாராகும் என்றும் சொல்கிறார்கள்..!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications