Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருத்தருமே கூப்பிடலியாமே.. "மதில்மேல்" தேமுதிக.. எடப்பாடி பழனிசாமி கணக்கு எங்கியோ போகுதே? கிளைமாக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? அதிமுகவுடனா? பாஜகவுடனா? என்பதில் மிகப்பெரிய குழப்பம் நீடிக்கிறது.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. தங்கள் கூட்டணி கட்சியோடு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையையும் தீவிரப்படுத்தி வருகின்றன.. அந்த வகையில் திமுக மட்டுமே லீடிங்கில் உள்ளது..

Is Edappadi K Palaniswamy Waiting for DMDK Alliance and Can BJP talke with Premalatha Vijayakanth

அதிமுக, பாஜகவிலோ இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. தேமுதிகவுடன் அதிமுக, பாஜக இரு கட்சிகளுமே பேச்சுவார்த்தையை நடத்திவருவதாக கூறப்படுகிறது. சீட் விவகாரத்தில் முன்னே பின்னே வித்தியாசம் இருந்தாலும், மாநிலங்களவை சீட் தருவதற்கு சான்ஸே இல்லை என்று அதிமுக சொல்லிவிட்டதாம்.

கோரிக்கை: "ராஜ்யசபா கோரிக்கையை கைவிட்டுவிட்டால் வாருங்கள், பேசலாம். அந்த கோரிக்கையுடன் தான் வருவீர்கள் என்றால், வர வேண்டாம்" என்று அதிமுக, பாஜக 2 கட்சிகளுமே கைகளை விரித்துவிட்டனவாம். அதற்கு பிறகு, பிரேமலதாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம்.

ஆனாலும், தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்தபடியே இருக்கின்றன.. கூட்டணி குறித்து இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்று பிரேமலதா தொடர்ந்து கூறிவந்தாலும், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மறைமுகமாக தேமுதிக நடத்தி வருவதாகவும், முக்கியமாக, மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

கூடுதல் சீட்கள்: மற்றொருபக்கம், தேமுதிகவிற்கு அதிமுக கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஒருவேளை ராஜ்யசபா கோரிக்கையை கைவிடும் பட்சத்தில், தேமுதிகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கவே அதிமுக முடிவு செய்து வைத்திருந்ததாம்..

ஆனால், தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வராததால், அதிமுக ஒருபடி இறங்கி வந்துள்ளது. அதனால்தான், 5 சீட்களை அக்கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும், மூத்த தலைவர்கள் சிலர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை நேரில் சந்தித்து பேசி இருப்பதாகவும் தகவல்கள் பரபரத்து வருகின்றன.

சீட் பேரம்: ஆனால், இந்த தகவலை அதிமுக உடனடியாக மறுத்துள்ளது.. சீட் பேரத்தை அதிகரிப்பதற்காக தேமுதிகவை சேர்ந்த சிலரே இப்படியான தகவல்களை பரப்புகிறார்கள் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

அதுபோலவே, தேமுதிகவும் இந்த தகவலை மறுக்கிறது.. அக்கட்சியின் துணைப்பொதுச்செயலர் பார்த்தசாரதி ஒரு சேனலுக்கு இதுகுறித்து அளித்த பேட்டியில், ''நாங்கள் இதுவரைக்கும் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களை யாரும் அழைக்கவும் இல்லை" என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்

மறுப்பு: ஆளுக்கு ஒருபக்கம் மறுப்பு சொன்னாலும், அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவே சொல்கிறார்கள்.. தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைவதாக வெளியாகிய தகவல் பாஜகவினரிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதனால்தான், பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், "எங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்" என்று சொன்னாராம்.

இப்படியெல்லாம் உறுதிப்படுத்தப்படாத யூகங்களும், தகவல்களும் றெக்கை கட்டி பறந்து வருவதால், தேமுதிக நிஜமாகவே யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்பது இப்போதுவரை சஸ்பென்ஸாகவே உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+