எத்தனை தலைமுறை வந்தாலும்.. வார்த்தையை விட்ட பெஞ்சமின்.. அணு குண்டை கையில் எடுத்த இஸ்ரேல்? நடுங்குதே!
ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடக்கும் போர் உச்சம் அடைந்து உள்ளது. இந்த போர் அணு ஆயுத போராக உருவெடுக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தி உள்ளது. காஸாவில் இருந்து கொண்டு கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்தான் அவர்கள் வரலாற்றில் நடத்தப்பட்ட பெரிய அட்டாக். பொதுவாக இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்.

ஹமாஸ் எப்போது தாக்கும் என்பதை எதிர்பார்த்தபடியே இஸ்ரேல் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஹமாஸ் இயக்கம்.. இஸ்ரேலை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல்.. அவர்களுக்கே தெரியாமல்.. நூதனமாக தாக்கி உள்ளது. இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பின் கண்களில் மண்ணை தூவி.. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் மீது ராக்கெட் மழையை பெய்துள்ளது.
கொடூர தாக்குதல்: இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் தாக்கி வருகிறது. காஸா உள்ளே குண்டு மழையை விடாமல் பெய்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு பழி வாங்கியே தீருவோம். ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம்.
காசா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது இந்த பிரம்மாண்ட தாக்குதலை நடத்திய ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் புகுந்து அங்கே கடுமையாக தாக்குதல் ஆப்ரேஷன்களை மேற்கொண்டு வருகிறது.

பெஞ்சமின் நெதன்யாகு: இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், இந்த போர், தாக்குதல் வெறும் தொடக்கம்தான். நாங்கள் இப்போதுதான் தாக்கவே தொடங்கி இருக்கிறோம். இனி எங்கள் தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும். நாங்கள் இன்னும் வலிமையாக தாக்க போகிறோம். இப்போதுதான் ஹமாஸை தாக்க தொடங்கி உள்ளோம், இனிமேல்தான் எங்களின் பலம் முழுமையாக ஹமாஸுக்கு தெரியும். இனி வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு புரிய போகிறோம்.
நாங்கள் செய்யப்போகும் சம்பவங்களின் விளைவுகள் இனி வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும் . அந்த அளவிற்கு இருக்க போகிறது. பல தலைமுறைகளுக்கு அவர்கள் இந்த தாக்குதலை உணருவார்கள். எங்கள் நாட்டு மக்களை அவர்கள் சீண்டிவிட்டார்கள். இதற்கான பதிலடியை கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications