அது பள்ளியா அல்லது கோசாலையா? மாட்டுப்பண்ணை வைக்க அனுமதி உண்டா? விசிக வன்னியரசு கேள்வி!
சென்னை: கள்ளக்குறிச்சி போராட்டத்தின் போது, பள்ளியில் இருந்த 36 பசுக்களை போராட்டக்காரர்கள் இழுத்துப்போய்விட்டதாக பள்ளி நிர்வாகம் புகார் கொடுத்துள்ள நிலையில், அது பள்ளியா அல்லது கோசாலையா என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி, கடந்த 13 ஆம் தேதி இரவு மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் வன்முறை
ஆனால் மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். 4 நாட்களாக தொடர் போராட்டங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 5ம் நாள் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் வன்முறை வெடித்தது.

பசுக்கள் காணவில்லை
இந்த போராட்டம், கலவரமாக மாறிய நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. மேலும் சிலர் பள்ளியிலிருந்து மேசை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகளை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக 350க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல் பள்ளி நிர்வாகம் சார்பில் 36 பசுக்களை போராட்டக்காரர்கள் இழுத்துப்போய்விட்டதாக புகார் கொடுத்துள்ளது.
Recommended Video

வன்னியரசு கேள்வி
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள விடுதலை சிறுத்தைக கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஶ்ரீமதியின் சாவுக்கான நீதிப்போராட்டத்தில் பள்ளியில் இருந்த 40 பசுக்களில், 36 பசுக்களை போராட்டக்காரர்கள் இழுத்துப்போய்விட்டதாக பள்ளி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது.

நடவடிக்கை தேவை
பள்ளியா? அல்லது கோசாலையா? பள்ளிகளில் மாட்டுப்பண்ணை வைக்க அனுமதி உண்டா? விடுதி மாணவர்களுக்கு தேவையான பால், தயிர் போன்றவைக்கு 40 பசுக்களா? அதுவும் விடுதிக்குளோ அல்லது பள்ளி வளாகத்துக்குள்ளோ மாட்டுப்பண்ணை எப்படி வைக்கலாம்? சட்டத்துக்கு புறம்பாக மாட்டுப்பண்ணை வைத்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் இந்த சக்தி இண்டெர்நேஷனல் பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்று உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார், பாஜகவின் தமிழ் வளர்ச்சிக்குழுவின் முன்னாள் மாநில அமைப்பாளராக இருந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications