ஃபார்முக்கு வந்த பாமக.. "ஆளுநர் ரவி இப்படியெல்லாம் செய்யக்கூடாது".. அன்புமணியா இப்படி பேசுவது?
ஆளுநர் ரவி அரசியல் செய்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
சென்னை: இத்தனை காலமும் பொறுமையாக இருந்த பாமக, இன்று வெளிப்படையாகவே பாஜகவை எதிர்த்துள்ளது.. நீட் விஷயத்தில் ஆளுநர் ரவி, அரசியல் செய்கிறார் என்று ஓபனாகவே போட்டு உடைத்துவிட்டது.
பாமக சமீப காலமாகவே அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த முறை தனித்தே போட்டியிட்டது. கூட்டணியும் சேரவில்லை.
வட மாவட்டங்களில் உள்ள ஓட்டு வங்கி நமக்குதான் என்ற நம்பிக்கையில் இருந்த பாமகவுக்கு நடந்து முடிந்த தேர்தல் பெரும் அதிர்ச்சியையும், அடியையும் கொடுத்துள்ளது...

வடமாவட்டம்
இத்தனைக்கும் செல்லுமிடமெல்லாம் வன்னியர் இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்ததை தங்களின் வெற்றியாக பிரச்சாரம் செய்து வந்தனர்.. ஒருகாலத்தில் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரித்த கட்சி என்பதுடன் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அலற வைத்த கட்சியும்கூட.. சுருக்கமாக சொல்லப்போனால், பாமக எந்தக் கூட்டணியில் இணைகிறதோ அந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்..

கருணாநிதி
அதனால்தான், கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, முதலில் பாமகவுடன் தான் கூட்டணி, தொகுதி பங்கீடு, சீட் விவகாரங்களை முடிவு செய்வார்கள். இன்று நிலைமை தலைகீழாகிவிட்ட நிலையில், அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் இறங்கி வருகிறார்.. பொதுவாக, பாஜக என்றாலே அவ்வளவாக எதிர்ப்பை பாமக இதுவரை காட்டியது இல்லை.. அதேசமயம், இந்தி மொழி, சமஸ்கிருத திணிப்பு என்றால், கொந்தளித்துவிடும்..

ஆளுநர் ரவி
கூட்டணியில் நீண்ட காலமாகவே இருந்ததால், அதிருப்தி கருத்துக்களை வெளியிடாமல் வந்த நிலையில், இன்று நீட் விஷயத்தில் பாமக அப்செட் ஆகி உள்ளது. ஆளுநர் ரவி அரசியல் செய்வதாக, வெளிப்படையாகவே இன்று அன்புமணி கூறியுள்ளார்.. செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் இன்று சொன்னதாவது: "வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு வருத்தம் தருகிறது.. இருந்தாலும், ஹைகோர்ட் எழுப்பி இருந்த 7 கேள்விகளில் 6 கேள்விகள் தவறானவை என்பதை சுப்ரீம் கோர்ட்டே உறுதி செய்துள்ளது.

விழுக்காடு
உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது... அதனால், தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மறுபடியும் சட்டமியற்ற வேண்டும்... சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது.

ஒதுக்கீடு
ஆனால், மற்றவர்கள் சொல்வது போல அதிமுக அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீடு சட்டம் அவசரகதியில் கொண்டுவரப்பட்டது அல்ல. நீண்டகால கோரிக்கைக்கு பின்பு முறையான கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அனுப்பி வைத்த நீட் மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்பதையே காட்டுகிறது" என்றார்.

நாம் தமிழர்
ஏற்கனவே டாக்டர் ராமதாஸ், இதே நீட் விவகாரத்தில் ஆளுநர் விஷயத்தில் அதிருப்தி காட்டியிருந்தார்.. அதில், 2022-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அட்டவணை எந்த நேரமும் அறிவிக்கப்படலாம். அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுனர் அவரது பாதுகாப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே கூறியிருந்த நிலையில், இன்று அன்புமணியும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.. காங்கிரஸ், மதிமுக, நாம் தமிழர் வரிசையில் பாமகவும் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது..
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications