சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரத்தக்கண்ணீர்".. முதல்வர் ஸ்டாலினின் பெரிய மூவ்! அது மட்டும் நடந்தா.. அதிர்ந்து நிற்கும் காங்.!

Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு ஊட்டியில் முக்கிய ஆலோசனை ஒன்றை மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலினின் இந்த மீட்டிங் காங்கிரஸ் தரப்பை பதற வைத்துள்ளதாம்.

பெரும் போராட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை ஆகியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து உள்ளது. தேசிய காங்கிரஸ் தலைகள் இதில் பெரிதாக கருத்து தெரிவிக்காத நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் இதில் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.

 குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க? செய்தியாளர் கேள்வி! பேரறிவாளன் உருக்கமான பதில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க? செய்தியாளர் கேள்வி! பேரறிவாளன் உருக்கமான பதில்

விமர்சனம்

விமர்சனம்

பாஜக இதில் பட்டும்படாமல் விமர்சனமும் வைக்காமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல்.. தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று நிலைப்பாடு எடுத்தது. ஆனால் காங்கிரஸ்.. தங்கள் தலைவரை இழந்த காரணத்தால், இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

 அறிக்கை

அறிக்கை

சிறையில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுதலை செய்ய சொல்லி ஏன் யாரும் குரல் எழுப்பவில்லை. அவர்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாதா?. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும்தான் உங்களுக்கு தமிழர்களாக தெரிகிறார்களா. அவர்களை மட்டும்தான் விடுதலை செய்யும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.

ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர்

அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம், பேரறிவாளனை விடுதலை செய்ததை தாங்க முடியவில்லை. ரத்தக்கண்ணீர் வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட குறிப்பிட்டு இருந்தார். பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் எதிர்த்து வரும் நிலையில்.. முதல்வர் ஸ்டாலின் அடுத்த 6 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்துள்ளார்.

போராட்டம்

போராட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுக்க பல முக்கிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் நடத்தப்பட்டது. இப்படி காங்கிரஸ் இந்த தீர்ப்பை எதிர்க்கும் நிலையில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை ஊட்டியில் நடத்தி உள்ளார். ஊட்டியில் இருந்தபடியே 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தார்.

Recommended Video

    பேரறிவாளன் விடுதலை! ரத்தக் கண்ணீர் வருது சார்..! கொந்தளித்த கே.எஸ்.அழகிரி.!
     காங்கிரஸ்

    காங்கிரஸ்

    உயர் அதிகாரிங்கள், டாப் லெவல் சட்ட வல்லுனர்கள், சீனியர் வழக்கறிஞர்கள் இந்த சந்திப்பில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தரப்பிற்கு இந்த மீட்டிங் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பேரறிவாளனை விடுவித்தது கூட ஓகே.. வழக்கில் அவர் தவறு செய்யவில்லை என்பது போன்ற சில கருத்துக்கள் உள்ளன. அனுதாபம் உள்ளது. ஆனால் மற்ற 6 பேர் அப்படி இல்லையே. மற்ற 6 பேர் கண்டிப்பாக குற்றவாளிகள் தானே அவர்களை விடுதலை செய்வது எப்படி சரியாகும் என்று காங்கிரஸ் தரப்பு கருதுகிறதாம்.

    காங்கிரஸ் கோபம்

    காங்கிரஸ் கோபம்

    முதல்வர் மட்டும் 6 பேரை விடுதலை செய்யும் முடிவை எடுத்தால் அது சிக்கலாகும். இப்போதும் கூட பேரறிவாளனை விடுதலை செய்தது கணக்குப்படி நீதிமன்றம்தான். அவர்கள் தங்கள் தனி அதிகாரத்தை பயன்படுத்தியே விடுதலை செய்துள்ளனர். ஆனால் அமைச்சரவை இந்த 6 பேரை விடுதலை செய்தால் அது அரசின் நிலைப்பாடாக இருக்கும்.. அது சரியாக இருக்காதே என்று காங்கிரஸ் கருதுகிறதாம். இருந்தாலும் எதிர்ப்பை மட்டும் தெரிவித்துக்கொண்டு.. காங்கிரஸ் ஒதுங்கிவிடும் என்றே கூறப்படுகிறது.

     எதிர்ப்பு மட்டும்

    எதிர்ப்பு மட்டும்

    6 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.. அவ்வளவுதான். திமுக 7 பேரை விடுதலை செய்ய போவதாக வாக்குறுதியிலேயே கூறிவிட்டது. தெரிந்துதான் கூட்டணி வைத்தோம். அதனால் எதுவும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் தரப்பு கருதுகிறதாம். திமுக தரப்போ காங்கிரஸ் எதிர்ப்பை கண்டுகொள்ளும் திட்டத்தில் இல்லையாம். எங்கள் நிலைப்பாடு இதுதான்.. நாங்கள் கொடுத்த வாக்குறுதி இது. சட்டப்படி ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்போம் என்று திமுக உறுதியாக இருக்கிறதாம்.

    English summary
    Is Tamil Nadu Govt planning to release the other 6 like Perarivalan? Congress won't be happy. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு ஊட்டியில் முக்கிய ஆலோசனை ஒன்றை மேற்கொண்டார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X