Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போன்ல அவரா? திமுகவை உதறுதா "கை"? ராகுல் காந்தியின் காதுக்கு போன தகவல்? விஜய் கிட்ட போகும் காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக - காங்கிரஸ் கூட்டணியின் சலசலப்புகள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.. திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று டெல்லியில் கடந்த 18ம் தேதி கூட்டத்தில் ராகுலும், கார்கேவும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு திட்டவட்டமாக சொல்லிவிட்டார்களாம்.. அப்படியிருந்தும் விஜய்யுடன் தமிழக காங்கிரஸ் இணையுமா? அப்படி இணைவதால் என்ன லாபம்? என்ன தாக்கம்? என்பது பற்றின யூகங்களும், வியூகங்களும் இணையத்தை சுற்றி வருகின்றன.. உண்மையிலேயே அரசியல் களத்தில் என்னதான் நடக்கிறது?

திமுக கூட்டணியில் நீண்ட காலமாகவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வருகிறது.. குறிப்பாக காங்கிரஸ் மேலிடமும், திமுக மேலிடமும் நல்ல இணக்கத்துடனேயே ஒருமித்து பயணித்து வருகிறார்கள்.. அத்துடன் சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழக்க விரும்பாத நிலையில்,தமிழக காங்கிரஸுடனான நல்லுறவை திமுக நீட்டித்தும் வருகிறது.

DMK Rahul Gandhi Vijay

தவெக விஜய்

எனினும், தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர், இனிமேல் அந்த கூட்டணி போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களாம்.. இதன் பின்னணியில்தான், தவெகவுடன் கூட்டணி என்ற அரசியல் கணிப்பு உருவாகி வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 40 அல்லது 50 தொகுதிகள் கிடைத்தாலும்கூட, அந்த கூட்டணியில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலைமையே தொடரும் என்பதே தமிழக காங்கிரஸில் "சில கதர் தலைவர்களின்" கவலையாக உள்ளது..

சில கதர் தலைவர்கள்

மேலும், தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்காவிட்டால், அந்த வாய்ப்பை அதிமுக பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் அந்த "சில கதர் தலைவர்கள்" கருதுகிறார்கள்...

ஒருவேளை அதிமுக, தவெக கூட்டணி அமைந்துவிட்டால், தேர்தலில் அவர்கள் வேற லெவலுக்கு சென்றுவிடும் சான்ஸும் உள்ளது.. அப்படி நடந்தால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் பெரிதாக பலன் இருக்காது என்பது அந்த "சில கதர் தலைவர்களின்" வாதமாக உள்ளது.

கேரளா, புதுவை

அதுமட்டுமல்ல, தவெகவுடன் நேரடியாக கூட்டணி வைத்தால், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல், தென்னிந்திய அரசியலிலும் காங்கிரஸுக்கு புதிய வாய்ப்புகள் வரக்கூடும் என்கிறார்கள் அந்த "சில கதர் தலைவர்கள்"..

இதற்கு புதுச்சேரி, கேரளா மாநிலங்களை உதாரணமாகவும் சொல்கிறார்கள்.. அதாவது விஜய்க்கு புதுச்சேரி, கேரளாவிலும் ரசிகர்கள் ஆதரவு உள்ளதால், அவை அப்படியே வாக்குகளாக மாறக்கூடும்.

ராகுல் காந்தி

எனவே புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 20, தவெக 10 என்று போட்டியிட்டால் நல்ல ரிசல்ட் பார்க்கலாம்.. அதேபோல் கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸுக்கு 100, தவெக 40 என பிரித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். தமிழத்திலும் தவெகவுக்கு 184, காங்கிரஸுக்கு 50 தொகுதிகள் என்று போட்டியிட்டால் மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிடலாம்.

கேரளா, புதுச்சேரி, தமிழகம் என எங்கு வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி காங்கிரஸுக்கும், துணை முதல்வர் பதவி தவெகவுக்கும் என்ற அதிகார பங்கீடும் பேசிக் கொள்ளலாம் என்றெல்லாம் ராகுல் காந்திக்கு தகவலாக அனுப்பி இருக்கிறார்களாம் அந்த "சில கதர் தலைவர்கள்"

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூட்டணி இன்னும் உறுதியாகாத சூழலில், கதர் கட்சிக்குள் குழப்பங்களும், யோசனைகளும் வலுத்தபடியே உள்ளன.

கரூர் துயரத்தின்போது ராகுல் காந்தி விஜயிடம் பேசியது, ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து பேசியதும், விஜயின் அப்பா சந்திரசேகரை காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி சந்தித்து பேசியது போன்றவை எல்லாமே பலவிதமான யூகங்களை கிளப்பி விட்டுள்ளன.

வாய்ப்பில்லை

எனினும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போகாது என்று அடித்து சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.. காரணம், ஏற்கனவே திமுக கூட்டணியில் 3 முறை போட்டியிட்டு வெற்றியை பார்த்துவிட்டது. அப்படியிருக்கும்போது, விஜய்க்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறதென்றே தெரியாமல் எப்படி கூட்டணி வைக்கும்? அதற்கெல்லாம் வாய்ப்பில்லை,

திமுகவை ராகுல் காந்தி, எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டார், திமுகவும் காங்கிரஸ் கேட்கும் சீட்களை தந்து சிறுபான்மை ஓட்டுக்களை தன்பக்கம் தக்க வைத்து கொள்ளவே பார்க்கும்" என்கிறார்கள்.

இப்படி கணிப்புகள் பலவிதமாக ஓடி கொண்டிருக்க, இனி அடுத்து என்னதான் நடக்க போகிறது என்று தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+