#Exclusive ஆன்லைன் சூதாட்டம்.. ‘டாப்’ தலையின் வாரிசுக்கு கனெக்ஷன்? ஆளுநர் மறுக்க காரணம் இதானா? ஓஹோ!
சென்னை : ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்குக் காரணம் டெல்லியில் இருக்கும் முக்கியஸ்தர்கள், அவர்களின் தொப்புள் கொடி உறவுகளுக்கு இருக்கும் கிரிக்கெட் தொடர்பு தான் என 'ஒன் இந்தியா அரசியல்' சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் மணி குற்றம்சாட்டியுள்ளார்.
உயிர்பலிகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவது அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
இந்நிலையில், ஆளுநர் ரவி, டெல்லியின் டாப் புள்ளிக்கும், அவரது ரத்த சொந்தத்திற்கும் இருக்கும் கிரிக்கெட் தொடர்பு, கிரிக்கெட் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்பு காரணமாகவே ஆளுநர் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என விமர்சித்துள்ளார் பத்திரிகையாளர் மணி.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களுக்குப் பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தொடர் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அதனைத் தடுக்க ‘ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை' இயற்றியது தமிழ்நாடு அரசு. இந்த மசோதாவிற்கு இதுவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் இருந்து வருகிறார். இதற்கிடையே ஏற்கெனவே அமலில் உள்ள அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுநர் ரவி தாமதம் செய்து வருவது அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது. இதில் ஆளுநர் அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

பாஜக இப்படி செய்யும் தான்
இந்நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி, ‘ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் தளத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது பெரும் விவாதங்களை எழுப்பி இருக்கும் சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி என புகார் தெரிவித்திருப்பது, ஆளுநருக்கு எதிரான விவாதங்களை திசைதிருப்பத்தான் என்ற திமுகவின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பத்திரிகையாளர் மணி, "தனது கடமையில் இருந்து தவறிய ஆளுநர் ரவி இன்று தமிழக அரசை எப்படி சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நாடறியும். அந்தப் பின்னணியில் பார்த்தால் இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழக பாஜகவினர் அதைச் செய்யக்கூடியவர்கள் தான்." எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரீம் லெவன் - சூதாட்டம்
மேலும் பேசியுள்ள பத்திரிகையாளர் மணி, "ஆன்லைன் சூதாட்டம் என்பது வெறும் ரம்மி மட்டும் கிடையாது. கிரிக்கெட் சூதாட்டம் இருக்கிறது. கிரிக்கெட் சூதாட்ட நிறுவனமான ட்ரீம் லெவன் தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சராக இருக்கிறது. ட்ரீம் லெவனுக்கு முக்கிய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர தூதுவர்களாக இருக்கிறார்கள். முக்கியமான மத்திய அமைச்சர் ஒருவரின் ரத்த உறவு கிரிக்கெட்டோடு தொடர்புடைய அமைப்பின் நிர்வாகியாக இருப்பது அனைவருக்கும் தெரியும். பல்லாயிரம் கோடி பணப் புழக்கம் கொண்டது இந்த கிரிக்கெட் பெட்டிங். அப்படியென்றால் எந்த சூதாட்ட கும்பலை காப்பாற்றுவதற்கு இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்துகிறார்? யாரை காப்பாற்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்?

ஆளுநருக்கு ஆப்ஷனே இல்லை
அண்ணாமலையையோ, எடப்பாடி பழனிசாமியையோ ஆளுநர் சந்திப்பதில் தவறு இல்லை. ஆனால், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக ஆளுநர், அரசிடம் கேள்விகள் எழுப்பிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்க நேரம் கேட்ட அமைச்சரை சந்திக்க மறுப்பது மோசமானது. அப்படி அவர் சந்திக்க மறுக்கவில்லை என்றால் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் அலுவலகம் மறுப்பு தெரிவிக்க வேண்டியது தானே? அப்படியென்றால் இந்த ஆளுநர் ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்வது உண்மைதானே? அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதிகபட்சம் விளக்கம் கேட்கலாம், மீண்டும் அனுப்பினால், ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வாய்ப்பே இல்லை. உச்ச நீதிமன்றம் பல விவகாரங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

சித்து விளையாட்டு
ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான். சமீபத்தில் வந்த பேரறிவாளன் விடுதலை, அதைத் தொடர்ந்த 6 பேர் விடுதலை வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளைப் பார்க்கும்போது, மாநில அமைச்சரவையின் முடிவு தான், ஆளுநரைக் கட்டுப்படுத்தக்கூடியது, தனியாக கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை சிதைப்பதற்காக ஆளுநர்களை வைத்து சித்து விளையாட்டு விளையாடுகிறது.

டாப் புள்ளியின் தொப்புள் கொடி உறவு
ஆன்லைன் சூதாட்ட தடை என்பது ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல, 25க்கும் மேற்பட்ட ட்ரீம் லெவன் மாதிரியான சூதாட்ட ஆப்கள் இருக்கின்றன. இன்று கிரிக்கெட்டை யார் கட்டுப்படுத்துகிறார்கள், அவர்கள் மத்திய அரசுடன் எந்தளவுக்கு நெருக்கமான தொப்புள் கொடி உறவுகள் என்பது நன்றாகவே தெரியும். இதில் ஆளுநரின் முடிவு அவரது முடிவு அல்ல, எய்தவன் இருக்க அம்பை நோகுவானேன்? ஆளுநரை குற்றம்சுமத்துவதை விட மத்திய அரசைத் தான் குற்றம்சாட்ட வேண்டும். ஆளுநரே மத்திய அரசின் பிரதிநிதி தானே? குறிப்பாக, கிரிக்கெட் தொடர்பான ஆன்லைன் சூதாட்டங்கள் நடப்பதால், பாஜக அதற்கு தடை விதிக்க மறுக்க வாய்ப்புள்ளது.

ஆளுநர் மறுப்பு - பின்னணியில் டெல்லி
மக்கள் மன்றத்தில் நாம் அம்பலப்பட்டுப் போவோம் என்பதற்காக ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஆதரவாக இருப்பது போல பாஜக காட்டிக்கொள்ளும். ஆனால், நடைமுறையில் ஆளுநரை கேள்வி கேட்காது. ஏன் பாஜக இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறதென்றால் பல லட்சம் கோடி புழங்கும் சூதாட்டத்தில் கிரிக்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய அரசுக்கும் கிரிக்கெட் தொடர்புடையவர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பது ஊரறிந்த விஷயம். மத்திய அரசு நினைத்தால் தான் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க முடியும். ஆனால், அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க மறுப்பதும்.

கிரிக்கெட் பெட்டிங் லாபி
மற்ற மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் கிடப்பில் போட்டிருப்பதற்கும், ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்ற மசோதாக்கள் எல்லாம் அரசுக்கு தொல்லை கொடுப்பதற்காக கிடப்பில் போட்டிருக்கிறார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததற்குக் காரணம் டெல்லியில் இருக்கும் முக்கியஸ்தர்கள், அவர்களின் தொப்புள் கொடி உறவுகளுக்கு இருக்கும் கிரிக்கெட் தொடர்பு, ஆன்லைன் கிரிக்கெட் பெட்டிங் லாபி தான்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications