கொரோனா பரவும் இக்கட்டான சூழ்நிலையில் நீட் தேர்வு நடத்த இது சரியான நேரம் தானா? - மு.க ஸ்டாலின்

இக்கட்டான சூழ்நிலையில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு வைப்பதற்கு இது சரியான நேரம் தானா?” என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு வைப்பதற்கு இது சரியான நேரம் தானா? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Is this the right time to hold NEET for PG courses MK Stalin tweets

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் நீட் தேர்வு வைக்கத்தான் வேண்டுமா என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகளுக்கு மத்தியில் நமது மருத்துவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு வைப்பதற்கு இது சரியான நேரம் தானா?" என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இருவரையும் டேக் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+