"இஸ்ரேலின் வன்முறைப் பாதையை உலகமே கண்டிக்க வேண்டும்.. இனியும் போர்கள் வேண்டாம்”: ஸ்டாலின்
சென்னை: "இஸ்ரேலின் வன்முறைப் பாதை கண்டிக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். இனியும் போர்கள் வேண்டாம்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 78 உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் நேற்று நள்ளிரவு முதல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால், டெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் த்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் வன்முறை பாதை கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயலாகும். இது பரந்துபட்ட அளவில் ஒரு போரை தூண்டிவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். இனியும் போர்கள் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications