மதிமுக முகமாகிறாரா துரை வைகோ? துணை பொதுச் செயலாளர் பதவி வழங்க திட்டம்.? தயாராகும் மாவட்ட செயலாளர்கள்
சென்னை : சென்னையில் மதிமுக மார்ச் 23ஆம் தேதி மதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோவின் மகனான துரை வைகோவுக்கு செயல் தலைவர் அல்லது கட்சியின் துணை பொதுசெயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என அழைக்கப்படும் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக ஆரம்பத்திலிருந்தே அக்கட்சியை தோற்றுவித்து பணியாற்றி வருகிறார் வைகோ.
கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகராகவும், அடையாளமாகவும் விளங்கி வருபவர் வைகோ.

வைகோ மதிமுக
தற்போது வரை மதிமுகவின் பொதுச் செயலாளராக வைகோ தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். அடுத்ததாக அவரது மகன் துரை வைகோ பல இடங்களில் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த துரை வைகோ அடுத்ததாக தேர்தல் பணிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

துரை வைகோவுக்கு பதவி
தொடர்ந்து அவரை கட்சியின் அடுத்த தலைமுறை முகமாக நிறுத்த வேண்டும் என தொண்டர்கள் கூறிவந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இணைந்த நிலையில் கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறி தலைமை நிலையச் செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு துரை வைகோ அந்தப் பதவியில் அமர வைக்கப்பட்டார்.

மீண்டும் புதிய பதவி
உடல்நலக் கோளாறு காரணமாக மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து பேசினார். மேலும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளாமல் துரைவைகோவே கலந்து கொண்டார்.

துணைப் பொதுச்செயலாளராக வாய்ப்பு
இந்த நிலையில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வைகோ கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் ஆணையராக மதிமுக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மதிமுக கூறியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications