சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு நடந்து வருகிறது

Recommended Video

    Operation AAA ஆரம்பம் | MR Vijayabasakar | IT Raid | Oneindia Tamil

    அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர்..கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்..

    அமைச்சராக இருந்தபோது, கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    ரெய்டு

    ரெய்டு

    இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்... அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரெய்டு

    ரெய்டு

    இதையடுத்து கரூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.. அதேபோல சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாய் கிருபா குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது.. இங்கும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது..

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    சென்னை, கரூர் உட்பட தமிழகம் முழுவதும் அவரது வீடு, சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்பு என 21 இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பல கோடிகள் லஞ்சம் பெற்று முறைகேடாக கையொப்பம் வழங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக வந்த தொடர் புகாரின்பேரில் இந்த திடீர் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    பரபரப்பு

    பரபரப்பு

    மேலும் இந்த சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்களும், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி கையொப்பமிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திடீர் சோதனையால் தமிழக அரசியலே பரபரப்பாகி உள்ளது.. ஐடி சோதனையை ஒட்டி முன்னாள் அமைச்சர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதையொட்டி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    IT raid in Ex Minister MR Vijayabaskar house and Important documents are stuck
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X