சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மர்ம மரணம்: சசிகலா மேல் சந்தேகம்.. பகீர் கிளப்பும் அண்ணன் மகள் ஜெ தீபா!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சசிகலா மேல் சந்தேகம் உள்ளது என ஜெ தீபா பகீர் கிளப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அவரது அண்ணன் மகள் ஜெ தீபா, மகன் தீபக் ஆகிய இருவரும் ஆட்சேபம் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சேஷாசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும், மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

வேதா நிலையம் பால்கனி... ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் கெத்தாக நின்று கையசைத்த தீபா வேதா நிலையம் பால்கனி... ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் கெத்தாக நின்று கையசைத்த தீபா

சென்னை மாவட்ட ஆட்சியர்

சென்னை மாவட்ட ஆட்சியர்

இந்த நிலையில் வேதா இல்லத்தின் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து இருவரும் வேதா இல்லத்திற்கு வருகை தந்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் உள்ளே சென்று வீட்டிற்குள் உள்ள அனைத்து அறைகளையும் 3 மணி நேரமாக பார்வையிட்டனர்.

வீட்டுக்குள் செல்ல முடியவில்லை

வீட்டுக்குள் செல்ல முடியவில்லை

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெ தீபா, ஜெயலலிதா மறைந்த பின்னர் இன்றுதான் இங்கு வந்துள்ளேன். அதாவது 4 ஆண்டுகள் கழித்து வீட்டிற்குள் வந்துள்ளேன். ஜெயலலிதா இறந்த அன்று என்னால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. வாசலில் தான் நின்றேன். முன்பை விட வேதா நிலைய வீடு தற்போது மிகவும் மாறியுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த அடையாளம்

ஜெயலலிதா வாழ்ந்த அடையாளம்

ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களில் நிறைய பொருட்களை காணவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த அடையாளங்கள் வீட்டிற்குள் எதுவுமே இல்லை. அவர் பயன்படுத்திய கட்டில் இல்லை. வீடு காலியாகவே உள்ளது. ஜெயலலிதா பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்படவுள்ளதாகவும் ஆனால் இந்த வீட்டை அறக்கட்டளையாக மாற்றும் எண்ணம் இல்லை.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம்

இந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால் இந்த வீட்டிற்கு பராமரிப்பு பணிகள் செய்வதற்கு நிறைய உள்ளது. அதை செய்ய வேண்டும். அதிமுக சார்பில் வேதா நிலையம் தொடர்பாக மேல்முறையீடு செய்தால் சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜெயலலிதா மர்ம மரணம்

ஜெயலலிதா மர்ம மரணம்

இந்த வீட்டை பார்த்தாலே ஏதோ ஒரு சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சசிகலா மேல் சந்தேகம் உள்ளது. அவரையும் விசாரிக்க வேண்டும். மரணம் தொடர்பான விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும். ஜெயலலிதாவுடன் எங்களுடன் நெருங்க விடாமல் தடுத்தவர் அவர்தான் என்றார் ஜெ தீபா.

English summary
J Deepa says that we have doubt on Sasikala in Jayalalitha's demise. She has to be inquired.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X