சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 பக்கமும் பலத்த இடி.. ஜெய் பீம்-சூர்யா சர்ச்சையில் சைலன்ட்டாக ஒதுங்கிய அதிமுக தலைகள்- நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சையும், நடிகர் சூர்யாவிற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் அதிமுக கருத்து எதுவும் தெரிவிக்காமல் சைலன்ட் ஆக உள்ளது. இதில் அதிமுகவின் டாப் தலைகள் கப் சிப் என்று இருக்க இரண்டு முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

கடந்த இரண்டு வாரமாக தமிழ்நாட்டில் ஜெய் பீம் பிரச்சனை தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாக வன்னியர் சங்கம் புகார் வைத்துள்ளது.

5 ஸ்டார் விடுதிகளில் இருந்துவிட்டு..காற்று மாசுக்கு விவசாயிகளை குறை சொல்கிறீர்கள்.. நீதிபதிகள் சாடல்5 ஸ்டார் விடுதிகளில் இருந்துவிட்டு..காற்று மாசுக்கு விவசாயிகளை குறை சொல்கிறீர்கள்.. நீதிபதிகள் சாடல்

ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வன்னியர் சங்கங்கள், அமைப்புகள் பல படத்திற்கு எதிராகவும், நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் கொதித்து போய் உள்ளன.

 ரூபாய் 1 லட்சம்

ரூபாய் 1 லட்சம்

நடிகர் சூர்யாவை தாக்கும் நபருக்கு 1 லட்சம் ரூபாய் தரப்படும் என்று மயிலாடுதுறை பாமக செயலாளர் பழனிசாமி அறிவிக்கும் அளவிற்கு இந்த மோதல் பெரிதாகி உள்ளது. படம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு நடிகர் சூர்யாவும் பதில் அளித்து இருந்தார்.

விசிக

விசிக


இந்த பிரச்சனையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துள்ளன. ஏன் பாஜக தலைவர் அண்ணாமலை கூட ஜெய் பீம் படத்தை பெரிய அளவில் விமர்சனம் செய்யாமல், இது நல்ல படம், ஆனால் யாரையும் புண்படுத்தி இருக்க கூடாது என்றே குறிப்பிட்டு இருந்தார். ஆளும் திமுக தரப்பு நேரடியாக படத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீமான்

சீமான்

நடிகர் சூர்யாவை உதைக்க வேண்டும் என சொன்னவரை அடிங்க நான் காசு தருகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூட இதில் கருத்து தெரிவித்துவிட்டார். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மட்டும் இதில் பெரிதாக கருத்து தெரிவிக்கவில்லை. எல்லோரும் கருத்து தெரிவித்தும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதை பற்றி பெரிதாக கருத்து தெரிவிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதேபோல் அதிமுகவில் வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் இருந்து கூட அதிமுக நிர்வாகிகள் யாரும் இதில் கருத்து தெரிவிக்கவில்லை. 2 விதமான விஷயங்கள் காரணமாக ஜெய் பீம் சர்ச்சை பற்றி அதிமுகவில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் வருகின்றன. காரணம் 1 - ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக ஏதாவது பேசினால் பாமக, வன்னியர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும்.

 பாமக வன்னியர்

பாமக வன்னியர்

ஏற்கனவே வன்னியர் இட ஒதுக்கீட்டால் தென் மண்டலத்தில் முக்குலத்தோர் வாக்குகளை அதிமுக இழந்துவிட்டது. கொங்கு மண்டல கட்சி என்ற அளவிற்கு அதிமுக சுருங்கி வருகிறது. வட மாவட்டத்தில் பாமக கூட்டணியால் கொஞ்சம் வன்னியர் ஆதரவு அதிமுகவிற்கு உள்ளது. இப்போது ஜெய் பீம் படத்தில் சூர்யாவிற்கு ஆதரவாக பேசினால் அந்த வன்னியர் ஆதரவும் கூட போய் விடும்.

அதிமுக சிக்கல்

அதிமுக சிக்கல்

இதனால்தான் பாஜக பேசிய அளவிற்கு கூட அதிமுக ஜெய் பீம் பற்றி பேசவில்லை. காரணம் 2 - இன்னொரு பக்கம் வன்னியர்களை ஆதரித்து சூர்யாவை எதிர்த்தும் அதிமுக நிலைப்பாடு எடுக்க முடியாது. சூர்யாவிற்கு அவரின் குடும்பம், பூர்வீகம் காரணமாக கொங்கு மண்டலத்தில் நல்ல ஆதரவு இருக்கிறது. சூர்யாவை எதிர்க்க போய் கவுண்டர்கள் உள்ளிட்ட மற்ற கொங்கு மண்டல வாக்குகளையும் இழக்க முடியாது.

Recommended Video

    Surya-வை மிரட்டினால் அவ்வளவு தான் - Dravidar Viduthalai Kazhagam | Oneindia Tamil
     2 காரணம்

    2 காரணம்

    சூர்யாவை எதிர்த்தால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு ஜாதி ரீதியாக கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். அதிமுக இப்போது கொங்கு மண்டலத்தில் மட்டுமே வலுவாக இருப்பதால் அந்த ரிஸ்க்கையும் எடுக்காது. இதனால் சூர்யாவை ஆதரித்தாலும் சிக்கல்.. எதிர்த்தாலும் சிக்கல் என்ற நிலையில் அதிமுக தலைகள் உள்ளனர். இப்படி இரண்டு பக்கமும் சிக்கல் இருப்பதால் அதிமுக சூர்யாவையும், ஜெய் பீம் படத்தையும் ஆதரிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் அமைதியாக ஒதுங்கி உள்ளது.

    English summary
    Jai Bhim: Why AIADMK and its leaders are not talking much about Surya's movie controversy?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X