Jana nayagan: ஜனநாயகன் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட காரணமான புகார் கடிதம் இதுதான்! அப்படி என்ன இருக்கிறது?
சென்னை: ஜனநாயகன் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட இந்த ஒரே ஒரு புகார் கடிதம்தான் காரணமாம். அந்த புகாரில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் சான்று கிடைக்காததால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. இந்த படத்திற்கான தணிக்கை சான்று பெற டிசம்பர் 19ஆம் தேதி படக்குழு விண்ணப்பித்திருந்தது.

இந்த படத்தை அன்றைய தினமே தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பார்த்தனர். இந்த படத்திற்கு யுஏ சான்று கொடுக்க முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் படம் பார்த்த உறுப்பினர்களில் ஒருவர்தான் படத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: ஜனநாயகன் திரைப்படம் எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் தணிக்கை வாரிய ஆய்வுக் குழுவினரால் அனுமதி அளிக்கப்பட்டு இந்தியா முழுவதும் ரிலீஸாக போகிறது என்பதை நான் அறிவேன்(இந்த கடிதம் ஜன 9ஆம் தேதிக்கு முன்னர் எழுதியது).
இந்த படத்தில் சில காட்சிகளும் வசனங்களும் இந்தியாவில் அன்னிய சக்திகளால் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டின் மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைய கூடும்.

அது போல் இந்த படத்தில் ராணுவம் தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால் படம் பார்த்த குழுவில் ராணுவத்தை சேர்ந்த அதிகாரியோ நிபுணரோ இடம் பெறவில்லை. அவர் இடம் பெற்றிருந்தால் , ராணுவ காட்சிகள் காட்டப்பட்டுள்ளது சரியா, இல்லை ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமா என்பதை அவர் தெரிவித்திருப்பார்.
படம் ஒளிப்பதிவு சட்ட விதிகளை மீறியுள்ளது. இந்த படத்தை ஆய்வு செய்த போது எனது ஆட்சேபம் கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பு (ஜன 9 க்கு முன்பு) இந்த விவகாரத்தில் தலையிட்டு மறு தணிக்கை செய்து விதிமீறல்களை சரி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட கோருகிறேன் என அந்த கடிதத்தில் அந்த புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications