சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம.பி.யில் முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவர் கொலை! பாஜக மீது பாயும் ஜவாஹிருல்லா!

Google Oneindia Tamil News

சென்னை: மத்தியப்பிரதேசத்தில் முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவர் பன்வாரிலால் ஜெயின் என்பவரை பாஜகவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா கொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டது ஒரு மனிதனின் உயிர் என்கிற நிலையைக் கடந்து, அதை மத ரீதியாகப்பார்க்கும் வெறுப்பு அரசியல் அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை ஊறிப்போய் உள்ளதாக வேதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அண்ணன் தம்பிகளாய் பழகுகிறோம்! காவி முகமூடி போட்டு வலம் வரும் ஆளுநர்! தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்அண்ணன் தம்பிகளாய் பழகுகிறோம்! காவி முகமூடி போட்டு வலம் வரும் ஆளுநர்! தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத்திறனாளி பன்வாரிலால் ஜெயின் என்பவரை " நீ முகமது தானே. உன் ஆதார் அட்டையைக்காட்டு"என்று சொல்லி பாஜகவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர், சரமாரியாகத்தாக்கி படுகொலைச் செய்யப்பட்ட பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வெறுப்புணர்வைத் தூண்டி

வெறுப்புணர்வைத் தூண்டி

மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்குபாஜக கொண்டு வந்துள்ளது. முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவரைத் தாக்கிக் கொன்று அழிக்கும் மிருகத்தனமான மனநிலையைத் தனது கட்சித் தொண்டர்களிடம் வீரியமாக வளர்த்தெடுத்து தற்போது இந்துக்களையே கொன்று ஒழித்து அறுவடை செய்துகொண்டிருக்கிறது பாஜக.

ஒரு மனிதனின் உயிர்

ஒரு மனிதனின் உயிர்

வட இந்திய ஊடகங்கள் முஸ்லிம் என்று நினைத்து இந்துவை தவறுதலாகக் கொன்றுவிட்டதாகத் தலைப்பிட்டு பரிதாபப் படுகின்றன. கொல்லப்பட்டது ஒரு மனிதனின் உயிர் என்கிற நிலையைக் கடந்து மத ரீதியாகப்பார்க்கும் வெறுப்பு
அரசியல் அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பாஜக மற்றும் சங் அமைப்புகளிடையே ஊறிப்போய் கிடப்பதையே இது காட்டுகிறது.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

இந்தியத் திருநாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சிறிய சான்று இந்த சம்பவம்.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பன்வாரிலால் ஜெயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பாஜகவினரின் வெறுப்பு அரசியலுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
Jawahirullah condemns Madhya Pradesh Bjp Executive Dinesh Kushwaha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X