இளைஞர்கள் காவல்துறையை எதிர்த்ததற்கு இது தான் காரணம்.. எதிர்காலம் முக்கியம்! ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே மஞ்சுவிரட்டின் போது அப்பகுதி இளைஞர்கள் காவல்துறையை எதிர்த்ததற்கு காரணம் வதந்தி தான் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. விடுக்கும் அறிக்கை வருமாறு:
திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்துள்ள கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில் ஜோலார்பேட்டை அடுத்துள்ள கம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த பீடி தொழிலாளி தவ்லத் என்பவரின் மகன் முஷ்ரப் என்ற 19 வயது இளைஞர் மாடு முட்டி மரணமடைந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ஏழை பீடி தொழிலாளியின் குடும்பத்தை இளைஞர் மரணமடைந்துள்ளதால் அவரது குடும்பம் ஆதவற்ற நிலையில் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மாடு முட்டி மரணமடைந்துள்ள இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகையும் அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோருகிறேன்.
அதேபோல், மரணமடைந்த அந்த இளைஞர் காவல்துறையினரால் தாக்கியதால் தான் மரணமடைந்தார் என்ற வதந்தி பரப்பப்பட்டு அதில் கோபமடைந்தவர்கள் சிலர் அப்பகுதியில் காவல்துறையை எதிர்த்துள்ளனர்.

இதனால் அங்கு அசம்பாவிதம் நடைபெற்றதால் அதை தொடந்து 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஒரு சிறுவன் உட்பட 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க வதந்திகளால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி காவல்துறை விடுவிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications