சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அநாகரிக அரசியல் செய்யும் அண்ணாமலை! தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்! ஜவாஹிருல்லா சாடல்!

Google Oneindia Tamil News

சென்னை: அநாகரிக அரசியலை புகுத்தத் துடிக்கும் அண்ணாமலைக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டுப் பேசிய அண்ணாமலைக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு 'டைவ்’ அடிக்க தயாராகும் முக்கிய புள்ளி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்! ஓஹோ! அதிமுகவில் இருந்து திமுகவுக்கு 'டைவ்’ அடிக்க தயாராகும் முக்கிய புள்ளி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்! ஓஹோ!

அண்ணாமலை

அண்ணாமலை

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களை "ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..? மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள்?'' என்று ஒருமையில் பேசியுள்ளார். இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை மட்டுமல்லாமல் ஊடகத்துறையின் மீது ஆர்வமுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

முன்னதாக கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் என்றார்.

ஜவாஹிருல்லா கண்டனம்

ஜவாஹிருல்லா கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்துள்ள நேர்மையான குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றாமல் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டுப் பேசிய அண்ணாமலைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நயத்தகு நாகரிக அரசியலை விடுத்து அநாகரிக அரசியலை தமிழகத்தில் புகுத்தத் துடிக்கும் அண்ணாமலை அவர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.

அருவருப்பு வார்த்தை

அருவருப்பு வார்த்தை

பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது போன்ற அருவருக்கத் தக்க வார்த்தைகளை எந்த அரசியல் கட்சித் தலைவரும் கூறியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பிடித்தால் பதில் சொல்வார்கள், இல்லையென்றால் பதிலளிப்பதை தவிர்த்துவிட்டு நடையை கட்டுவார்கள். இதனிடையே அண்ணாமலை தொடர்ந்து செய்தியாளர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தி வருவதை பாஜக மேலிடத்துக்கு பக்காவாக நோட் போட்டு அனுப்பிவிட்டது தமிழகத்தில் உள்ள அவரது எதிர் டீம்.

English summary
People of Tamil Nadu will teach a proper lesson to Annamalai who is trying to introduce dirty politics, Jawahirullah said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X