சிவில் நீதிபதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும்! காரணம் இருக்கு! டிஎன்பிஎஸ்சி க்கு ஜவாஹிருல்லா கோரிக்கை!
சென்னை: அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக 2018ல் 222 பேரும், 2019 ல் 56 பேரும் சிவில் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது சிவில் நீதிபதி பதவிக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப பதிவு, ஜூன் ஒன்றாம் தேதி துவங்கியது.
ஜூன் 30க்குள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதியும், மெயின் தேர்வு அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.இதில் மொத்தம் 245 பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாகத் தெரிய வருகிறது.
அரசின் சட்டக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் தற்போது தான் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு மதிப்பெண் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயின்று தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுத முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
அதே வேளையில் பல தனியார் சட்டக் கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்குப் பயின்றோர் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியைப் பெற்றுள்ளனர். இதனால், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு மறுக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு TNPSC சிவில் நீதிபதி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications