ஜெயலலிதா மரணம்.. 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து மூன்று மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016, செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கேயே சுமார் 75 நாட்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் 2016 டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம்
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக்கப் பலரும் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு, இது குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்தது. சுமார் மூன்று ஆண்டுகள் கடந்த போதிலும், ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை எந்தவொரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், சுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் விசாரணை ஆணையம் 2017ஆம் ஆண்டே அமைக்கப்பட்டாலும் இதுவரை அந்த ஆணையம் ஒரு இடைக்கால அறிக்கை கூட தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

3 மாதங்கள்
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இன்னும் மூன்று மாத காலத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழ்நாடு அரசு ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

ஜெயலலிதா மரணம்
தமிழ்நாடு தேர்தல் பிரசாரத்தின்போதும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக கேள்வி எழுப்பியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிகொண்டு வரப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உட்படப் பலரும் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications