ஜேசிடி பிரபாகர் பாடி லேங்குவேஜ் பார்த்தீங்களா? திமுகவை விடாத விஜய்.. திரிஷாவுக்கு ராஜ்ய சபா சீட்டா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டு, வெறும் ஆதரவாளர்களையும் தீவிர ரசிகர்களையும் குஷிப்படுத்துவதற்காக மட்டுமே ஆவேசமாகப் பேசுகிறார் விஜய்.. ஆனால், 30, 40, 50 வயதில் மாற்றத்தை விரும்பி வாக்களித்தவர்கள், ஏமாற்றத்தில் உள்ளனர்" என்று அரசியல் விமர்சகர் ஜெகதீசன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல சேனல் ஒன்றில் பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் ஜெகதீசன், "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள், சட்டம் ஒழுங்கு, குற்றங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் அளிக்கப்படாமல் திசைதிருப்பப்படுகின்றன..

JCD Prabhakar

திரிஷா - ஜெயலலிதா

பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்துப் பேசும்போதெல்லாம் தவெக சார்பில் பெண்களின் முகமாக அல்லது பிரதிநிதியாக திரிஷாவைக் கொண்டு வருகிறார்களா? எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முன்னிறுத்தியது போல இங்கேயும் திரிஷாவை ஒரு முக்கியப் பொறுப்பிலோ அல்லது 2028-ல் ராஜ்யசபா போன்ற தளங்களிலோ முன்னிறுத்த முயல்கிறார்களா?

அரசியல் ரீதியான அழுத்தங்களை உருவாக்கவும், தலைவர்களை அரசியல் களத்தில் முடக்கவும் இத்தகைய ED சோதனைகள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.. . அரசியல் ரீதியாக அவர்களை முடக்கவும், நெருக்கடி கொடுக்கவுமே மத்திய அமைப்புகள் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன.

ஊழல், லஞ்சம் புகார்கள்

இந்த சோதனைகள் நடக்கும்போது, "நாங்கள் தவறே செய்யவில்லை, எங்களை அரசியல் ரீதியாகப் பழிவாங்குகிறார்கள்" என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கவே தலைவர்கள் முயல்கிறார்கள்.

அதே நேரத்தில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் "நீங்கள் ஊழல் செய்துவிட்டீர்கள்", "நீங்கள் மத்திய அரசை வைத்துப் பழிவாங்குகிறீர்கள்" என்று சட்டமன்றத்திலும் வெளியிலும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். ஊழல் புகார்களை வைத்து இரு தரப்பும் அரசியல் செய்கிறார்களே தவிர, மக்களின் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைத் தருவதில்லை.

ஜேசிடி பிரபாகரன் பாடி லேங்குவேஜ்

ஜேசிடி பிரபாகரன் பாடி லேங்குவேஜ் பார்த்தீர்களா? எப்போது விஜய் பேசி முடிப்பார் என்றிருந்தது அவரது பாடிலேங்குவேஜ்.. 53 நிமிடத்தில் எதுவுமே ஆக்கப்பூர்வமான பேச்சு கிடையாது..

சட்டமன்றத்தில் மக்கள் கேள்விகளுக்கும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும் அரசு சரியான பதில்களைத் தருவதில்லை. வெறும் ஆவேசமாகப் பேசுவதோ அல்லது சத்தம் போட்டுப் பேசுவதோ மட்டுமே பதிலாகிவிடாது. சத்தமாகப் பேசிவிட்டால் நாம் சொல்வது எல்லாம் சரி ஆகிவிடுமா?

மக்கள் தங்களுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்தார்கள். ஆனால், அந்த மக்களுக்கு உண்மையில் என்ன மாற்றம் கிடைத்துவிட்டது? எதிர்க்கட்சிகள் எழுப்பிய நேரடி கேள்விகளுக்குத் திசைதிருப்பாமல் நேரடியான பதில்களைத் தருவதுதான் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு.

திமுகவை வன்ம நதி என்கிறார் விஜய்

திமுகவை வன்ம நதி என்கிறார் விஜய்.. அப்படியானால் 50 வருடத்துக்கு முன்பிருந்த விஷயத்தை இப்போது விஜய் தோண்டி எடுத்து வருவதன் பெயர் என்ன? சர்க்காரியா கமிஷனை பற்றி இப்போது பேசுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்ல தவெகவினர் செய்யும் ஊழல் பற்றி தெரியுமா? ஊழல் இல்லாத ஆட்சி என்று கருத்தாக்கத்தை மட்டும் பதிவு செய்ய நினைக்கார் விஜய்.. ஆனால், இப்போது எங்கே ஊழல் இல்லை?

சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மக்கள் பிரதிநிதிகளாகவும் இருப்பவர்கள் சாதாரண மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.. அரிசி விலை, தக்காளி விலை, வெங்காய விலை என்னவென்றே தெரியாமல் பலர் இருக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான திமுக பேச அனுமதி கேட்கும்போது, "நான் பேச விட மாட்டேன், நான் எடுத்ததுதான் முடிவு" என்று சபாநாயகர் மறுப்பது ஒரு சரியான ஜனநாயக நடைமுறையாகத் தெரியவில்லை.. அது ஒரு செட்டப் போலத் தோன்றுகிறது..

ஏமாற்றத்தில் மக்கள்

எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் அச்சமின்றிப் பதில் சொல்ல வேண்டும்.. முதலமைச்சர் தலையிட்டு எதிர்க்கட்சிகளைப் பேச விடுவதே பெருந்தன்மை.. மாறாக எதிர்க்கட்சிகளைப் பேச விடாமல் தடுப்பதும் கேள்விகளுக்கு நேரடிப் பதில்களைத் தராமல் திசைதிருப்புவதும் முறையான அவையின் நடவடிக்கையாக இருக்க முடியாது.

சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டு, வெறும் ஆதரவாளர்களையும் தீவிர ரசிகர்களையும் குஷிப்படுத்துவதற்காக மட்டுமே ஆவேசமாகப் பேசுகிறார் விஜய்.. ஆனால், 30, 40, 50 வயதில் மாற்றத்தை விரும்பி வாக்களித்த சாமானிய மக்கள், "நாம் என்ன எதிர்பார்த்து வாக்களித்தோம், இவர்கள் சட்டமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று ஏமாற்றத்தோடுதான் பார்க்கிறார்கள்" எனறெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+