ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம்...கடைசி தேதி எப்போ தெரியுமா?

2022 ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022 ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், 2ஆம் கட்டஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இந்தாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்திருந்தது.

கோரிக்கை ஏற்பு

கோரிக்கை ஏற்பு

இதனிடையே முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ. முதன்மை தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலாவது பிரதான தேர்வு, ஜூன் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 :00 மணி முதல் மாலை 6 வரை தேர்வு நடைபெறும். மே மாதத்தில் திட்டமிடப்பட்ட இரண்டாவது பிரதான தேர்வு, ஜூலை 20ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு

ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு

இந்த நிலையில் 2022 ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், " JEE (Main) 2022 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு/புதிதாகச் சமர்ப்பிப்பதற்கு, மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள்

ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள்

ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள், jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் 18/04/2022 முதல் 25.04.2020 வரை மட்டும் புதிதாக சமர்ப்பிப்பதற்கு/பூர்த்தி செய்வதற்குமான வசதி ஆன்லைனில் இருக்கும் என்று அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வது/ சமர்ப்பிப்பது ஆகியவை மாலை 5 மணி வரையிலும் கட்டணம் செலுத்துவது இரவு 11 50 வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும். தேவையான கட்டணங்களை, கடன் அட்டை /சேமிப்பு கணக்கு அட்டை / இணையதள வங்கிச் சேவை/ யுபிஐ பேடிஎம் மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பிப்பது எப்படி

விண்ணப்பிப்பது எப்படி

விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 011-40579000/011-69227700. மின்னஞ்சல் தொடர்புக்கு [email protected]

கேள்விகள் எப்படி

கேள்விகள் எப்படி

கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும். ஆனால், தாள் - Iல் உள்ள இரண்டு பகுதிகளுக்கும் (MCQ & Numerical Value Type Questions) நெகடிவ் மதிப்பெண் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறை இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+