சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டார்ச்லைட்டுக்கு ஓட்டு போடுங்க.. கமலுக்காக விருகம்பாக்கத்தில் பிரபல நடிகை வீடு வீடாக பிரச்சாரம்!

Google Oneindia Tamil News

சென்னை: கமல்ஹாசனுக்காக சென்னை விருகம்பாக்கத்தில் வீடு வீடாக சென்று நடிகை ஜெனிபர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் சிவகங்கை, மதுரை, நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

நாளை நமதே என்ற கோஷத்துடன் இவர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஒவ்வொரு தொகுதியிலும் அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து விமர்சனம் செய்து வந்தார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்ய போகிறோம் என்பதையும் அவர் பட்டியலிட்டார். இந்த நிலையில் அவருக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்ததால் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். ஓய்வுக்கு பின்னர் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடர்வார் என தெரிகிறது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்த நிலையில் கமல்ஹாசனுக்காக பிரபல நடிகை ஒருவர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் வேறு யாருமில்லை கில்லி படத்தில் விஜய்யின் சகோதரியாக புவனா என்ற கேரக்டரில் நடித்த ஜெனிபர். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

கமலின் ரசிகை

கமலின் ரசிகை

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். டார்ச் லைட் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என கேட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவரது இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். மேலும் கமலின் ரசிகையும் நான்.

ஆதரவு

ஆதரவு

தற்போது அவர் நடிக்காமல் மக்களுக்காக பணியாற்ற உள்ள நிலையில் அவரை வலுவாக நான் ஆதரிக்கிறேன் என ஜெனிபர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் கோவை சரளா, கமீலா நாசர், ஸ்ரீ பிரியா, சினேகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் உள்ள நிலையில் அந்த வரிசையில் ஜெனிபரும் இணைந்துள்ளார்.

English summary
Actress Jenifer involves in election campaign at door to door in Virugambakkam for Kamalhassan's party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X