கோட்டை தாண்டி எகிறி அடிக்கணும்.. பிரதமரை யார் இழிவா பேசினாலும் Tit for Tat தான்.. சொல்வது ராஜா
திருமாவளவனை விமர்சித்து எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது... கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம்... அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் டிவிக்களில் யார் பிரதமரை இழிவாக பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும்" என்று பாஜகவினருக்கு, அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அறிவுறுத்தி உள்ளார்.
Recommended Video
நேற்றுமுன்தினம் நியூஸ் 7 டிவி நிகழ்ச்சியில் புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பிரச்சினை பற்றிய விவாதத்தில், ஜோதிமணி பேசும்போது, பிரதமர் மோடியை தாக்கி பேசியிருந்தார்.

அதேபோல, பாஜகவின் சார்பில் பங்கேற்ற கரு.நாகாஜன் "நீ கேவலமான பெண்'' என்று ஜோதிமணியை விமர்சித்து பேசினார். இது தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. பல தரப்பினரும் இதற்கு கண்டனங்களை பதிவு செய்தனர்.
அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவனும் கண்டித்து கருத்து சொல்லி இருந்தார்.. அதில் "நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை டி.வி. விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல்" என்றார்.

திருமா என்றாலே முதல் ஆளாக வந்து பதில் கருத்து சொல்லும் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா இதற்கும் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், என்ன திருமாவளவன் அவர்களே, உங்களைப் போல பா.ஜ.க.காரர்கள் நாகரீகமாக பேசலை என்கிறீர்களா?" என்று கூறி, திருமாவளவன் எப்போதோ காயத்ரி ரகுராமை பற்றி பேசின ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ட்வீட்டில் "கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்தியும் உள்ளார். இந்த ட்வீட்டுக்கு வழக்கம்போல் சிறுத்தைகள் திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications