பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது.. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எழுதியதாக பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் +2 மாணவியின் உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் (57) தமிழகத்தின் முன்னோடி பத்திரிகையாளரான மகாகவி பாரதியின் நினைவு நாளில் (11-09-2022) சென்னையில் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

கள்ளக்குறிச்சி வழக்கு
இன்று முற்பகலில் சீருடை அணியாத நான்கு போலீசார் அவருடைய வீட்டிற்குள் வந்து அவரை கைது செய்திருக்கின்றனர். அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். அவருடைய மனைவியின் செல்போனையும் வாங்குவதற்கு முயற்சித்து உள்ளனர். சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரை செலுத்தி உள்ளனர். பின்னர், அங்கிங்குமாக விசாரித்த பிறகே சாவித்திரி கண்ணனைக் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் துறையினர் கைதுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துமீறல்
ஒரு பத்திரிகையாளரை - நீதிமன்ற வழிகாட்டல்களுக்கு முரணாக, சீருடையில் இல்லாத காவல் துறையினர் தடாலடியாக வீட்டிற்குள் நுழைந்து, எவ்விதத் தகவல்களும் தராமல், இப்படிக் கைதுசெய்திருப்பது மிக மோசமான செயல். அரசு ஒருவேளை உண்மைக்குப் புறம்பானது, சட்ட நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஏதேனும் செய்தியைக் கருதுமாயின் அப்படியான செய்திகளையும், செய்தியாளர்களையும் எதிர்கொள்ள ஜனநாயகத்தில் சட்டபூர்வமான வழிமுறைகள் நிறைய உள்ளன.

கோரிக்கை
தமிழக அரசு அத்தகைய ஜனநாயக வழிமுறையைத்தான் கையாள வேண்டுமே அன்றி, இத்தகைய அடக்குமுறை வழியைக் கையாளக் காவல் துறையை அனுமதிக்கக் கூடாது. அந்த வகையில் 35 ஆண்டுகளாகத் தமிழகப் பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீதான இந்தக் கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் உடனடியாக தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர்களை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது. தமிழக முதல்வர் இதைச் செய்வார் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்." என கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications