முதல் மனைவி ஸ்ருதியை வெளியே வைத்து கொண்டு! மாதம்பட்டி ரங்கராஜ் சொன்ன அந்த வார்த்தை! ஜாய் ஓபன் அப்!
சென்னை: மகளிர் ஆணையத்தின் முதல் மனைவியை வெளியே வைத்துக் கொண்டு மாதம்பட்டி ரங்கராஜ் சொன்னது என்ன தெரியுமா என ஜாய் கிரிஸில்டா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாதம்பட்டி ரங்கராஜ், மகளிர் ஆணையத்தில், என்னை திருமணம் செய்ததாக ஒப்புக் கொண்டார். அப்போது நான் டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என கேட்டேன்.

நான் எதற்காக கேட்டேன் என்றால், மாதம்பட்டி ரங்கராஜின் கோவை சொந்தக்காரர்களும், குடும்பத்தினரும் "அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையது இல்லை" என ஒரு வதந்தியை கிளப்பி வருகிறார்கள். நாளைக்கு இது என் குழந்தையே இல்லை என மாதம்பட்டி ரங்கராஜ் சொல்லிவிட்டால் என்ன செய்வது?
அதனால் நான் டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம் என்றேன். அதற்கு அவர் "அதெல்லாம் வேண்டாம், இது என் குழந்தைதான்" என ஒப்புக் கொண்டார். இந்த குழந்தை ரங்கராஜின் குழந்தையில்லை என சொல்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு என்ன உரிமை இருக்கிறது?
2 ஆண்டுகள் குடும்ப நடத்திய ரங்கராஜ்
2 ஆண்டுகளாக ரங்கராஜ் என்னுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த போது எங்க போனீங்க! அவரது குடும்பத்தை கேட்டுவிட்டும் அவர்களிடம் சொல்லிவிட்டும்தான் என்னை அவர் திருமணம் செய்தார்.
மகளிர் ஆணையத்திடம், என்னை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்ட ரங்கராஜ், வெளியே வந்து நான் மிரட்டியதால் திருமணம் செய்ததாக மாற்றி பேசுகிறார். குழந்தை என்ஐசியூவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் ரங்கராஜ், அந்த குழந்தையை கொச்சைப்படுத்தி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
15 பெண்கள் வந்து பிளாக்மெயில் செய்து திருமணம் செய்துகோ என சொன்னால் ரங்கராஜ், அந்த 15 பேரையும் திருமணம் செய்து கொள்வாரா, இப்படி ஒரு அறிக்கை வெளியிடுவாரா?
மெசேஜ்கள்
என்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்கள் என்னிடம் இருக்கு. அப்போ பிளாக்மெயில் செய்துதான் அனுப்பினாரா? Investigation room-ல் "எனது குடும்ப உறுப்பினர்கள்தான் ஜாயுடன் பழக விட மாட்டேங்கிறார்கள், பேச விட மாட்டேங்கிறார்கள். என்னை பிடித்து வைத்திருக்கிறார்கள்" என ரங்கராஜ் தெரிவித்தார்.
ரங்கராஜ்
மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையை நானே ரங்கராஜோ இல்லை ஆணைய அதிகாரிகளோ மறுத்தோ பொய்யோ பேச முடியாது. அரசு சம்பந்தப்பட்ட ஒரு இடத்தில் ஒன்றை பேசிவிட்டு, வெளியே வந்து மாற்றி பேசினால், அவர்களிடம் ஆதாரம் இருக்கும்.
ஜாய் நல்ல பெண்
அந்த விசாரணை அறையில் அந்த பெண் அதிகாரியிடம் ரங்கராஜ் சொல்கிறார், "எனது முதல் மனைவி வெளியே நிற்கிறார், அவரை வைத்தே சொல்கிறேன், ஜாயை போல் என்னை யாருமே பார்த்துக் கொள்ள மாட்டார்கள். நான் ஜாயை மிஸ் செய்கிறேன்.
மகளிர் ஆணையம்
மகளிர் ஆணையத்தின் ஆர்டர் காப்பியில், ரங்கராஜ் என்னை திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டார் என்றும் டிஎன்ஏ டெஸ்ட் வேண்டாம் என்றும் சொன்னது இருக்கிறது. எனக்கு முதல் குழந்தை நார்மல் டெலிவரியில் பிறந்தது.
மன உளைச்சல்
இரண்டாவது குழந்தை சிசேரியன். எனக்கு மனஉளைச்சலை கொடுத்து சி செக்ஷன் ஆக்கியது ரங்கராஜும் அவரது குடும்பத்தினரும்தான். டிசம்பர் 1 ஆம் தேதிதான் எனக்கு குழந்தை பிறக்கும் என்றார்கள். ஆனால் முன்கூட்டியே பனிக்குடம் உடைந்து எமர்ஜென்சியில் போனதும் சிசேரியன் செய்து குழந்தையை எடுத்துவிட்டார்கள்.
சிசேரியன்
சிசேரியன் செய்ததால் என்னால் நடக்கக் கூட முடியவில்லை. என் குழந்தையை கூட பார்க்க முடியவில்லை. குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. ரங்கராஜ் என்ன சதி செய்தாலும் என் குழந்தைக்காக நான் போராடுவேன்.
"பிறந்தது என் குழந்தையில்லை" என்பதை ரங்கராஜ் நிரூபிக்கப்பட்டும். நமக்குள் நடந்த உறவும் பிளாக்மெயில் செய்ததாலா? நான் பிளாக்மெயில் செய்திருந்தால் தாராளமாக ரங்கராஜ் போலீஸில் புகார் அளித்திருக்கலாமே! இவ்வாறு ஜாய் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications