பொன்முடியின் பட்டை, நாமம் வழக்கு! மைக்கில் பேசினால் மன்னர்களா? எதையும் பேசுவார்களா? நீதிபதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை : சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கை எப்படி முடித்து வைக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழக அமைச்சராக இருந்த பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பெண்கள் மற்றும் மத அடையாளங்கள் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

ponmudi chennai

சைவம், வைணவத்தை விலை மாதருடன் ஒப்பிட்டு மிகவும் கொச்சையாக பேசியிருந்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். திமுக எம்பி கனிமொழியும் இவரது பேச்சு ஏற்க முடியாதது என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்தன. இந்த நிலையில் பொன்முடி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதுடன் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பொன்முடிக்கு எதிராக 124 புகார்கள் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நீதிபதி வேல்முருகன் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில் சர்ச்சை கருத்தை கூறிய பொன்முடி வழக்கை எப்படி முடித்து வைக்க முடியும்? பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? அமைச்சராக இருந்த ஒருவர் இஷ்டம் போல் கருத்துகள் தெரிவிப்பது சரியா?

இதில் நீதிமன்றம் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது . ஒருவரை கொன்றுவிட்டு நான் கொல்ல விரும்பவில்லை என கூற முடியுமா? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது. இது ஜனநாயக நாடு. மக்களுடன்தான் அமைச்சரும் வசிக்கிறார் என்ற எண்ணம் வர வேண்டும்.

உங்கள் செயலை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. புகாரளித்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெற்ற பின்னரே வழக்கை முடிக்க முடியும். 124 புகார்களையும் போலீஸ் எப்படி முடித்து வைத்தது? மைக்கில் பேசினால் மன்னர்களா? பொது இடங்களில் பேசும் போது மக்கள் பிரதிநிதிகள் யோசித்து பேச வேண்டும். இவ்வாறு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+