கலாநிதி மாறன் அனிருத்துக்கு தரும் கல்யாண பரிசு? ரூ.300 கோடிக்கு பலே பிளான்! தாலி எடுத்து தருவது இவரா
சென்னை: அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 10ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக ஆஸ்கார் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
MEDIA CIRCLE சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "நவம்பர் 10ம் தேதி திருமணம் நடைபெறும் என்று சொல்லப்பட்டாலும், 2 குடும்பத்தினரும் இதுவரை தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

அனிருத், காவ்யா மாறன் இருவருமே பிரபலங்கள் என்பதால், அவர்களது திருமணத்தில் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. ரஜினிகாந்த் மடியில் தவழ்ந்து வந்த குழந்தைதான் அனிருத். அதனால் ரஜினிகாந்த் தாலி எடுத்து தந்துதான் இந்த திருமணம் நடக்க போகிறது.. ரஜினி தலைமையில்தான் நடக்க போகிறது. கலாநிதி மாறனுடன் கலந்தாலோசித்து, இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டு வருகிறார்.
கலாநிதி மாறன்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய விஜய்யும் திருமணத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் எனப் பெரிய பட்டாளமே வரக்கூடும். முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கிரீஸ் திருமணத்தில் பங்கேற்க போகிறார்கள்.
அனிருத்துக்கும் விஜய்க்கும் நெருக்கமான நட்பு இருக்கிறது. விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கும் அனிருத்தான் இசையமைத்துள்ளார்.
விஜய் இப்போது முதலமைச்சராக இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசு நடைமுறைகள் காரணமாக வெளிநாட்டில் நடைபெறும் திருமணத்தில் அவர் பங்கேற்பது சவாலாக இருக்கலாம். ஆனால், சென்னையில் நடைபெறும் ரிசப்ஷனில் விஜய் கலந்துகொள்ள 99 சதவீதம் வாய்ப்புள்ளது.. ஏனென்றால் அனிருத்தை தன்னுடைய தம்பி போலவே விஜய் நினைக்கிறார். அவர்களுக்குள் நல்ல "பாண்டிங்" உள்ளது.
சென்னையில் 2 ரிசப்ஷன்
கிரீஸில் கல்யாணம் நடைபெற்றாலும், சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரிசப்ஷன்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதா கூறப்படுகிறது. லீலா பேலஸில் முக்கிய பிரமுகர்களுக்கான ரிசப்ஷன் நடைபெறலாம். அங்கு முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. லிமிடெட் நபர்களுக்குதான் இந்த லீலா பேலஸில் இடவசதி இருக்கும்..
அதனால் சுமார் 5,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஒரு ரிசப்ஷனும், 10,000 பேர் வரை பங்கேற்கும் வகையில் இன்னொரு ரிசப்ஷனும் நடத்தத் திட்டமிடப்படுவதாக தெரிகிறது. திரையுலகப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் விருந்து வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஒரு லட்சம் கோடி சொத்து.
சன் குழுமக் குடும்பத்தின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்ற கணிப்பு உள்ளது... கலாநிதி மாறனின் ஒரே வாரிசான காவ்யா மாறன் மிகப்பெரிய தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்னொருபக்கம், அனிருத் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற இசையமைப்பாளர். எல்லாருமே கொண்டாடக்கூடிய மியூசிக் டைரக்டராக உள்ளார்..
அனிருத்தின் இசை, இளமைத் தோற்றம், தனித்துவமான ஆடை அலங்காரம், மேடை நிகழ்ச்சிகள் என அனைத்துமே ரசிகர்களைக் கவர்கின்றன. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவரது இசையைக் கொண்டாடுவதால், அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதனால் இந்த திருமணத்தை, 2 குடும்பங்களின் செல்வத்தின் அடிப்படையில் மட்டுமே பார்க்க முடியாது.
ஆடைகள், விருந்து
திருமணத்தில் மணமக்கள் அணியும் உடைகள் பிரத்யேகமாக டிசைன் செய்யப்படலாம்.. அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும். திருமணத்திலும் ரிசப்ஷன்களிலும் அணியும் ஆடைகள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் 2 குடும்பங்களும் கவனம் செலுத்துவார்கள்.
விருந்தில் 80, 90 வகையான உணவுகள் அல்லது அதற்கும் அதிகமான உணவு வகைகள் இடம்பெறலாம்.. அதனால் முன்னணி சமையல் கலைஞர்களைக் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்படும்..
திருமண செலவு ரூ.300 கோடியை தாண்டுமா?
எல்லாமே கிராண்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. வெளிநாட்டுப் பயணம், தங்குமிடம், போக்குவரத்து, உணவு, ஆடைகள், அலங்காரம், ரிசப்ஷன் என அனைத்தையும் சேர்த்தால் திருமணச் செலவு ரூ.300 கோடியைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த், அனிருத் ஆகியோருக்கு கலாநிதி மாறன் கார் பரிசளித்தார். இப்போது தனது மகளைத் திருமணம் செய்துகொள்ளும் அனிருத்தை மருமகனாக மட்டுமல்லாமல் மகனைப் போலவும் கருதி, அவருக்குப் பிரம்மாண்டமான பரிசுகளை வழங்கலாம்.. திருமணத்தில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கும் காஸ்ட்லி பரிசுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
மொத்தத்தில், அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதியாகி, திட்டமிட்டபடி நடைபெற்றால், விருந்தினர்கள், ஆடைகள், உணவு, ரிசப்ஷன்கள், பரிசுகள் எனப் பல அம்சங்களால் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பேசப்படும் பிரம்மாண்ட நிகழ்வாக அமையலாம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
