அனுமதியின்றி விடுமுறை.. 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்
ஞாயிறன்று மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

பேருந்துகளுக்கு தீ வைப்பு
பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், ஆனால் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

5 பேர் கைது
தான் சரியாக படிப்பதில்லை என மற்ற ஆசிரியர்களிடம் அவதூறு பரப்பியதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார். தாய், தந்தைக்கு சாரி சொல்லி அவர் அந்த கடிதத்தை முடித்துள்ளார். இந்த கடித த்தின் அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளிகள் மூடல்
தனியார் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை முதல் தமிழகத்தில் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்காது, கள்ளக்குறிச்சி பள்ளி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தனியார் பள்ளிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு எச்சரிக்கை
தனியார் பள்ளிகள் மூடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்தது.

987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
இதனிடையே கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Recommended Video

ஸ்டிரைக் வாபஸ்
இந்த நிலையில் வேலை நிறுத்தம் தொடர்பாக பள்ளி கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சவாத்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நாளை முதல் பள்ளிகள் இயக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்ததாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications