"கழுவேலி ஈரநிலம்" 16வது பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'கழுவேலி ஈரநிலத்தை' தமிழ் நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழ் நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆணை, பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் 15 பறவைகள் காப்பகங்கள் உள்ள நிலையில் இந்த அறிவிப்பால் தற்போது பறவைகள் காப்பங்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

கழுவேலி ஈரநிலம் 16வது சரணாலயம்
தமிழ்நாட்டில் 15 பறவைகள் சரணாலயங்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'கழுவேலி ஈரநிலத்தை' தமிழ் நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சரணாலய எல்லைக்குள் 12 கிராமங்கள்
அரசு அறிவிப்பின்படி, மரக்காணம் தாலுக்காவில் உள்ள நடுக்குப்பம், செய்யாங்குப்பம், செட்டிக்குப்பம், அனுமந்தை, ஊரணி, கீழ்புதுப்பட்டு, கூனிமேடு, திருக்கனூர் ஆகிய கிராமங்களில் உள்ள கழுவேலி உவர் நீர் ஏரி சதுப்பு நிலப் பகுதியும், கிளாப்பாக்கம், கொழுவாரி, கழுபெரும்பாக்கம் தாலுகா, வானூர், தேவனான், காரட்டை ஆகிய கிராமங்களும் இணைக்கப்படும்.

மொத்த பரப்பளவு 5,151 ஹெக்டேர்
இந்த எட்டு கிராமங்களை உள்ளடக்கிய 3,027.25 ஹெக்டேர் பரப்பளவும், வானூரில் உள்ள ஐந்து கிராமங்களில் 2,124.35 ஹெக்டேர் பரப்பளவு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். கடற்கரை சதுப்பு நில ஏரியான கழுவேலி ஈரநிலம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவின் அருகில் அதாவது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரோவில் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

ஏற்கனவே 15 சரணாலயங்கள்
தற்போது தமிழ்நாட்டில் பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல், கோடியக்கரை, கரைவெட்டி, வேட்டங்குடி, கூந்தன்குளம் போன்ற இடங்களில் 15 பறவை சரணாலயங்கள் உள்ளன. நீர்நிலைகளில் வாழும் பறவைகளைப் பாதுகாக்க அப்பகுதிகள் பறவைகள் சரணாலயங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள் சரணாலயங்களுக்குள் வந்து மீண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் திரும்பிச் செல்வது வழக்கம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications