சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எதுபற்றியும் ஆழமாக படிக்காமல் உளறும் பழக்கமுள்ளவர்" கமல்ஹாசன் மீது பாய்ந்த எச்.ராஜா!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எதையும் ஆழமாக படிக்காமல் உளறும் பழக்கமுடையவர் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மணி விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், ராஜராஜ சோழனை ஹிந்து மன்னராக மாற்றிவிட்டனர். அடையாளங்கள் மாற்ற முயற்சிகள் நடக்கிறது. அதனை மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று பேசி இருந்தார்.

இதனிடையே பொன்னியின் செல்வன் படம் வெளியானதையடுத்து, ராஜராஜ சோழன் விவகாரம் அரசியல் கட்சியினர் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

காற்றில் கரைந்து போவார்கள்..ஓபிஎஸ் உடன் இணைப்பா? 100% வாய்ப்பில்லை ராஜா..எடப்பாடி பழனிச்சாமி தடாலடி காற்றில் கரைந்து போவார்கள்..ஓபிஎஸ் உடன் இணைப்பா? 100% வாய்ப்பில்லை ராஜா..எடப்பாடி பழனிச்சாமி தடாலடி

கமல்ஹாசன் ஆதரவு

கமல்ஹாசன் ஆதரவு

இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்திருந்தனர். இதனிடையே வெற்றிமாறனின் கருத்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஹிந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது. ஹிந்து என்பது வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் என்று கூறி ஆதரவு அளித்தார்.

பாஜக கண்டனம்

பாஜக கண்டனம்

இதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி, ராஜராஜ சோழன் காலத்தில் ஹிந்து மதம் இல்லை என்றால், ஜாதி வேறுபாடுகளுக்கு ஹிந்து மதம் தான் காரணம் என்று இவ்வளவு காலமாக பேசியது தவறு என்பதை கமல் ஒப்புக்கொள்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

பி.ஏ.கிருஷ்ணன் பதிவு

பி.ஏ.கிருஷ்ணன் பதிவு

இந்நிலையில் கமலின் நண்பரும், எழுத்தாளரும், ஓய்வுபெற்ற மத்திய அரசு செயலருமான பி.ஏ.கிருஷ்ணன் தன் பேஸ்புக் பக்கத்தில், கமலுடன் கலந்துரையாடினேன். 10-ம் நுாற்றாண்டில், ராஜமுந்திரி என்ற இடம் இல்லை. அப்போது ராஜமகேந்திரவரம் என்று அழைக்கப்பட்டது.

அதுபோல எளிமையானதே ஹிந்து மதம் பற்றி, நான் சொன்ன கருத்து. ராஜராஜ சோழன் காலத்தில், சிவனை வழிபட்டவர்கள், 'சைவர்' என்றும், விஷ்ணுவை வழிபட்டவர்கள் 'வைணவர்' என்றும் அழைக்கப்பட்டனர். இந்த மறுக்க முடியாத உண்மையைத் தான் கூறினேன். ஹிந்து மதம் இருப்பதை நான் மறுக்கவில்லை' என்று, என்னிடம் கமல் கூறினார். இதை பொதுவில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதித்தார். என்று பதிவிட்டார்.

எச்.ராஜா ட்வீட்

எச்.ராஜா ட்வீட்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கமல்ஹாசன் எதுபற்றியும் ஆழமாக படிக்காமல்உளறும் பழக்கமுள்ளவர். ஆனால் நான் காசுக்காக பைபிள் விற்றேன் என்று கரன் தாப்பரிடம் இவர் கூறியதையோ, இவருடைய சகோதரர் சந்திரஹாசன் கிறித்தவ முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டதையோ, சாருஹாசன் தொடர்ந்து இந்து விரோதமாக பேசிவருவதையோ மறுக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Senior BJP leader H. Raja has criticized Makkal Needhi Maiam Leader and actor Kamal Haasan as having a habit of babbling without studying anything deeply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X